ஆந்திரப் பிரதேச மாநிலம், தனது தொழில் வளர்ச்சிக்கான புதிய அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறது. இந்த அத்தியாயத்தின் முக்கிய நாயகன் இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) திகழ்கிறது.
சந்திரபாபு நாயடு தலைமையிலான அரசு புதிய முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்ற முயற்சியில் விசாகப்பட்டினம் நகரில் டிசிஎஸ் நிறுவனம் தனது புதிய ஐடி அலுவலகத்தை அமைக்கும் திட்டத்தை வெறும் 90 நிமிடத்தில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய அலுவலகம், 10,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திரப் பிரதேச அரசு 'ease of doing business' என்பதை காட்டிலும் "speed of doing business" என்ற கொள்கையை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அம்மாநில ஐடி, எலக்ட்ரானிக்ஸ் துறை அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்தார். இந்த கொள்கையின் விளைவாக, விசாகப்பட்டினத்தில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) க்கு 90 நிமிடங்களில் புதிய கேம்பஸ் அமைக்கும் ஒப்பந்தம் முடிவடைந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
லாஸ் வேகாஸில் நடைபெற்ற ITServe Alliance Synergy மாநாட்டில் பேசிய நாரா லோகேஷ், வணிக செயல்முறைகளை எளிமைப்படுத்தி பல்வேறு தடைகளை குறைப்பது வேகமாக ஒப்புதல், வேகமான செயல்பாடு ஆகியவற்றை செயல்படுத்துவதில் மாநில அரசு உறுதிகொண்டு உள்ளது.
இதற்கு வித்திட்டவர் டாடா சன்ஸ் தலைவர், "நான் டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரனை சந்தித்தபோது, அவர் எனக்கு என்ன ஆலோசனை சொல்வார் என்று கேட்டேன். அவர் வியாபாரம் செய்யும் வேகத்தில் கவனம் செலுத்துங்கள் என்று கூறினார்," என்று நாரா லோகேஷ் கூறினார்.
டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரனின் ஆலோசனையால் ஈர்க்கப்பட்ட ஆந்திரப் பிரதேச அரசு, பிஸ்னஸ் செய்யும் வேகத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. முதலீட்டிற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதன் மூலம், மாநிலம் கணிசமான முதலீடுகளை ஈர்த்து முக்கியமான IT ஹப் ஆக உருவாகும் நோக்கம் கொண்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் விரைவில் தொடங்கப்படவுள்ள TCS வளாகம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும். இந்த திட்டம் மாநிலத்தின் முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications