இந்தியாவின் முன்னணி ஐடி ஊழியர்கள் கடந்த ஆண்டுக்கான சம்பள உயர்வு குறித்த அறிவிப்புக்காக காத்திருக்கும் வேளையில், டிசிஎஸ் பங்குச்சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் உயர் அதிகாரிகளுக்கான சம்பளம் அளவுகளை வெளியிட்டு உள்ளது.
ஒரு பக்கம் ஐடி ஊழியர்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தையில் ஏற்பட்டு உள்ள பொருளாதார மாற்றங்கள் மூலம் புதிய வர்த்தகம் கிடைப்பதில் அதிகளவிலான பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த வருடத்திற்கான சம்பள உயர்வு வழக்கத்தை காட்டிலும் குறைவாகவே இருக்கும் என கணிக்கப்பட்டும் நிலையில் டிசிஎஸ் உயர் அதிகாரிகளின் சம்பள உயர் தடாலடியாக உயர்ந்துள்ளது.

சமீபத்தில் இன்போசில் வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக் 2022-23 நிதியாண்டில் அவருடைய வருடாந்திர ஊதியம் 21 சதவீதம் குறைந்து 56.4 கோடி ரூபாயாக உள்ளது. 2022 ஆம் நிதியாண்டில் சலில் பாரிக் 71 கோடி ரூபாயா சம்பளமாக பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ-வான ராஜேஷ் கோபிநாதன் மார்ச் மாதம் பாதியில் தான் பதவி விலகுவது குறித்து அறிவித்தார், இதேபோல் ஜூன் 1 ஆம் தேதியில் இருந்து தான் கே கிருதிவாசன் தனது டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக பொறுப்பேற்றுள்ளதால் 2023 ஆம் நிதியாண்டுக்கான சம்பளத்தில், பர்பமென்ஸ் போனஸ், பங்கு பகிர்வு திட்டங்களில் ராஜேஷ் கோபிநாதன்-க்கு எவ்விதமான பாதிப்பும், குறைவும் இல்லை.
இந்த வகையில் 2023 ஆம் நிதியாண்டுக்கு ராஜேஷ் கோபிநாதன் சுமார 30 கோடி ரூபாயை தொகையை சம்பளமாக பெற்றுள்ளார், இது 2022 ஆம் நிதியாண்டின் 25.76 கோடி ரூபாய் சம்பளத்துடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகமாகும். ராஜேஷ் கோபிநாதன் 1.73 கோடி ரூபாயை சம்பளமாகவும், 2.43 கோடி ரூபாயை அலவென்ஸ் மற்றும் இன்ன பிற பிரிவில் பெற்றுள்ளார், கமிஷன் பிரிவில் சுமார் 25 கோடி ரூபாய் அளவிலான தொகையை பெற்றுள்ளார். இவை அனைத்தையும் சேர்த்து தான் 30 கோடி ரூபாய் வருடாந்திர சம்பளம்.
இதேபோல் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் என் கணபதி சுப்ரமணியம் கடந்த ஆண்டு 20 கோடி ரூபாயை சம்பளமாக பெற்று நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கு 24 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார். இவருடயை சம்பளத்தில் சுமார் 19.50 கோடி ரூபாய் கமிஷன் மட்டுமே.
ராஜேஷ் கோபிநாதன் 2017 ஆம் நிதியாண்டில் 13.37 கோடி ரூபாயை சம்பளமாக பெற்ற நிலையில் 2023 ஆம் நிதியாண்டில் கிட்டதட்ட 120 சதவீதம் சம்பள உயர்வுடன் 29.16 கோடி ரூபாயை பெற்றுள்ளார். இதேபோல் என் கணபதி சுப்ரமணியம் இக்காலக்கட்டத்தில் அவருடைய சம்பளம் 10.11 கோடி ரூபாயில் இருந்து 23.50 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications