இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ் 2023 ஆம் ஆண்டில் குறிப்பாக கே கிருதிவாசன் சிஇஓ-வாக அதிகாரப்பூர்வமாக பதவியேற்றிய பின்பு பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. டிசிஎஸ் ஒருபக்கம் வெளிநாட்டு சந்தைகளில் இருந்து புதிய வர்த்தகங்களை பெற முடியாமல் தவித்து வரும் வேளையில்..
மறுபுறம் ஊழியர்கள் நியமனத்தில் விதிமீறல்கள் என பல வாரங்களாக நடந்த விசாரணையில் பல உயர் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும், நெருக்கடியிலும் டிசிஎஸ் நிர்வாகம் சக போட்டி நிறுவனங்களை விடவும் சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டது.

இந்த சூழ்நிலையில் டிசிஎஸ் உயர்மட்ட நிர்வாகத்தில் பல முக்கிய மாற்றங்களை செய்துள்ளது, இந்த முக்கிய மாற்றத்திற்கான காரணம் டிசிஎஸ் நிறுவனத்தின் துணை தலைவர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான அனந்த கிருஷ்ணன் வருகிற அக்டோபர் மாதம் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதனால் நிர்வாகத்தை வலிமையானதாக மாற்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது.
இதில் முக்கியமாக பார்க்கப்படுவது டிசிஎஸ் நிறுவனத்தின் சீஃப் சர்வீஸ் இன்னோவேஷன் ஆபீசர் ஆன டாக்டர் ஹாரிக் வின் வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி சீனியர் மேனேஜ்மென்ட் பர்சனல் ஆக உயர்ந்துள்ளார். கடந்த 30 வருடமாக டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் இதற்கு முன்பு TCS Digitate நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.
டிசிஎஸ் நிர்வாகம் ஹாரிக் வின் மட்டும் அல்லாமல் சங்கர் நாராயணன், வி ராஜண்ணா, அசோக் பாய், ரகுராமன் அய்யாசுவாமி மற்றும் சிவகணேசன் ஆகியோரை Senior Management Personnel (SMP) ஆக ஜூலை 31 முதல் தொடர்வார்கள் என அறிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் டிசிஎஸ் நிறுவனத்தில் சுமார் 25 முதல் 35 வருடம் பணியாற்றுபவர்கள்.
இந்த 6 பேரும் கே கிருதிவாசன் அவர்களின் முக்கிய நிர்வாக குழு அதிகாரியாக இருப்பார்கள், இவர்கள் தலைமையில் தான் இனி ஒட்டுமொத்க வர்த்தகமும், நிர்வாக முடிவுகளும் எடுக்கப்பட உள்ளது.
மேலும் சிஇஓ-வாக கே கிருதிவாசனை நியமிக்கும் முன்பு அவர் தலைமையின் கீழ் இருந்த BFSI பிரிவை தற்போது இரண்டாக உடைக்கப்பட்டு உள்ளது, இதில் முக்கியமாக வட அமெரிக்கா BFSI வர்த்தகத்தை சுசீல் வாசுதேவன் நிர்வாகம் செய்ய உள்ளார். இதேபோல் வட அமெரிக்காவை தவிர அனைத்து பிராந்தியங்களிலும் சங்கர் நாராயணன் வழிநடத்த உள்ளார்.
இதேபோல் கடந்த வருடம் ராஜேஷ் கோபிநாதன் தலைமையிலான நிர்வாகம் acquisitions, relationship incubation, enterprise growth மற்றும் business transformation என்ற 4 பிரிவு உருவாக்கப்பட்டது, இதை தற்போது மொத்தமாக மூடப்பட உள்ளது. இதில் relationship incubation பிரிவின் தலைவராக இருந்தவர் தான் சுசீல் வாசுதேவன்.
இப்படி பல முக்கிய பிரிவுகளின் தலைவர்கள் மாற உள்ளனர், இதை அனைத்தையும் சரியாக ஜூன் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்பு செய்யப்பட்டு உள்ளதால், நிர்வாகத்திற்கும், வர்த்தகத்திற்கும் எவ்விதமான பாதிப்பும் இருக்காது.


Click it and Unblock the Notifications