டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் சிஇஓ கே.கிருதிவாசன் அடுத்தடுத்து பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவது மட்டும் அல்லாமல் புதிய வர்த்தகங்கள் கிடைக்காத இந்த நேரத்தில் முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து வளர்ச்சியை காட்ட வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் உள்ளார்.
ஐடி துறையில் ஏற்கனவே பல பிரச்சனைகள் இருக்கும் வேளையில் டிசிஎஸ் நிறுவனத்திற்கும், சிஇஓ கிருதிவாசன்-க்கும் புதிய சிக்கல் வந்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 450 மில்லியன் டாலர் இழப்பை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்த வார தொடக்கத்தில் Deutsche Bank வெளியிட்ட ஒரு முக்கியமான அறிவிப்பு மூலம் டிசிஎஸ் நிறுவனத்திற்கு 450 மில்லியன் டாலர் பாதிப்பு உருவாகியுள்ளது. அப்படி என்ன அறிவிப்பு அது..? இந்த அறிவிப்பால் இந்திய ஐடி ஊழியர்களுக்கு ஏதேனும் பிரச்சனை வருமா..?
Deutsche Bank வெளியிட்ட அறிவிப்பில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் போஸ்ட்பேங்க்-ன் 550 கிளைகளில் பாதியை மூடுவதாக அறிவித்தது. இதற்கு முக்கிய காரனமாக ஜெர்மனியின் மிகப்பெரிய வங்கியாக விளங்கும் Deutsche Bank, தங்களுடைய அதிகப்படியான வாடிக்கையாளர்கள் வங்கி கிளைக்குள் செல்வதை விட ஆன்லைன் வங்கியை விரும்புவதாக தெரிவித்துள்ளது.
நவம்பர் 2020 இல்தான் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) போஸ்ட்பேங்கின் ஐடி நிறுவனமான போஸ்ட்பேங்க் சிஸ்டம்ஸ் ஏஜி-யை வாங்கியது. ஜெர்மனியில் அதிகப்படியான வர்த்தகத்தை பெற வேண்டும் என்ற முயற்சியில் போஸ்ட்பேங்கின் ஐடி பிரிவை வாங்கியது.
TCS இல் இணைந்த போஸ்ட்பேங்க் சிஸ்டம்ஸின் 1,500 கம்பியூட்டர் இன்ஜினியர்கள் தான் போஸ்ட்பேங்க் நிறுவனத்திற்காகன மொத்த டெக் சேவைகளும் அளிப்பது. இந்த 1500 ஊழியர்கள் கோட் எழுதுவது முதல் அப்பிளிகேஷன்களை உருவாக்குவது மற்றும் பராமரிப்பது வரை அதன் முழு தொழில்நுட்பத் தேவைகளையும் நிர்வகிக்கின்றனர்.இது இன்னும் தொடர்கிறது.
போஸ்ட்பேங்க் சர்வீசஸ் நிறுவனத்தை டிசிஎஸ் கைப்பற்ற பின்பும், டிசிஎஸ் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் ஏஜி என மறுபெயரிடப்பட்டது. 2022 ஆம் ஆண்டில் டிசிஎஸ் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் ஏஜி 220 மில்லியன் டாலர் வருவாயை பெற்றது, இதில் 80% கிட்டதட்ட 180 மில்லியன் டாலர் போஸ்ட்பேங்க்-கிற்கு கொடுத்த சேவை மற்றும் சப்போர்ட் மூலம் வந்தது.
250 போஸ்ட்பேங்க் கிளைகளை மூடுவதும், அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் தொழில்நுட்பப் பணிகளும், டிசிஎஸ் நிறுவனத்திற்கு 2025 ஆம் ஆண்டுக்குள் 130 மில்லியன் டாலராக குறைக்க திட்டமிட்டு உள்ளது Deutsche Bank. இதன் மூலம் கிட்டதட்ட 60 மில்லியன் டாலர் இழப்பு.
இதேபோல் ஆடியன்ஸ் ரேட்டிங் நிறுவனமான Nielsen டிசிஎஸ் உடன் 2017ல் 8 வருடத்திற்கு 2.25 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தை அளிப்பதாக ஒப்பந்தம் செய்தது. ஆனால 2025 ஆம் ஆண்டில் நிலவரத்தை பார்க்கும் போதும் 320 மில்லியன் டாலர் வர்த்தகத்திற்கு பதிலாக 139 மில்லியன் டாலர் வர்த்தகத்தை மட்டுமே பெற முடியும் என கணக்கிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் 180 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு.

இதேபோல் ஜூன் மாதம் டிசிஎஸ் அமெரிக்காவின் Transamerica Life Insurance Co வர்த்தக ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டது அனைவருக்கும் நினைவிருக்கும். Transamerica Life Insurance என்பது நெதர்லாந்து நாட்டின் Aegon NV நிறுவனத்தின் கிளை நிறுவனம். இந்நிறுவனம் மூலம் வருடம் 200 மில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தை டிசிஎஸ் பெற்று வந்தது. ஒப்பந்த முறிவால் மொத்தமும் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இப்படி ஜெர்மனி, அமெரிக்கா, நெதர்லாந்து என 3 முக்கிய வர்த்தக பிராந்தியத்தில் இருந்து வருடம் 440 மில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கும் வேளையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் சிஇஓ கே.கிருதிவாசன் எப்படி சமாளிக்க போகிறார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.


Click it and Unblock the Notifications