இந்தியாவின் 5வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ-வின் புதிய சிஇஓ-வாக நியமிக்கப்பட்டு உள்ள சீனிவாஸ் பல்லியா 2025 ஆம் நிதியாண்டுக்கு அதிகப்படியாக சுமார் 7 மில்லியன் டாலர் அதாவது 58 கோடி ரூபாய் அளவுக்கான சம்பளத்தைப் பெற வாய்ப்புகள் அளிக்கப்பட்டு உள்ளதாக வெளியான அறிவிப்பு ஒட்டுமொத்த ஐடி துறையைப் புரட்டிப்போட்டது.
இந்த நிலையில் இந்திய ஐடி சேவை துறையின் மிகப்பெரிய நிறுவனமாக விளங்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தின் 2024 ஆம் நிதியாண்டின் முழு அறிக்கையை பங்குச்சந்தையில் தாக்கல் செய்த நிலையில், அதில் இந்நிறுவன மூத்த அதிகாரிகளின் சம்பளம் விபரத்தை டிசிஎஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது, டிசிஎஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியிலும், ஐடி துறையினர் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது மட்டும் அல்லாமல் பெரிய விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
TCS நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் (CEO & MD) கே.கிருதிவாசன் 2023-24 நிதியாண்டில் மொத்தம் 25.2 கோடி ரூபாய் சம்பளத்தை பெற்றுள்ளார். இது, கடந்த ஆண்டு டிசிஎஸ் சிஇஓ ஆக இருந்த ராஜேஷ் கோபிநாதன் அவர்களின் ஊதியமான ரூ.29.16 கோடியை காட்டிலும் சற்று குறைவு என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
ஆனால், கிருதிவாசன் சம்பளத்தில் ஒரு சிறிய அளவிலான வித்தியாசம் உள்ளது. இந்த 25.2 கோடி ரூபாய் சம்பளம் முழு நிதி ஆண்டிற்கானது அல்ல.
ஏப்ரல் 1, 2023 முதல் மே 31, 2023 வரை கிருதிவாசன் டிசிஎஸ் நிறுவனத்தின் உலகளாவிய வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீடு (BFSI) பிரிவின் தலைவராக இருந்தார். ஜூன் 1, 2023 முதல் மார்ச் 31, 2024 வரை சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றினார்.
சிஇஓ சம்பளத்திற்கும், ஒரு பிரிவின் தலைவரின் சம்பளத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கும் காரணத்தாலேயே கிருத்திவாசன் 2023-24 ஆம் நிதியாண்டில் வெறும் 25.2 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தை மட்டுமே பெற்றுள்ளார் என டிசிஎஸ் நிறுவனம் பங்குச் சந்தையில் தாக்கல் செய்த ஆண்டு அறிக்கையில் விளக்கியுள்ளது.
மேலும் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (COO) மற்றும் நிர்வாக இயக்குநர் (ED) என்.ஜி.சுப்ரமணியம் அவர்களின் மொத்த ஊதியம் 2023-24 நிதியாண்டில் ரூ.26.1 கோடி ஆகும். இந்த மாதம் (மே 2024) டிசிஎஸ் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.
இதோடு டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ-வான கோபிநாதன் கடந்த ஆண்டு ஏப்ரல் 1, 2023 முதல் மே 31, 2023 வரையில் சிஇஓ-வாக பணியாற்றியதற்கு 1 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தைப் பெற்றுள்ளார். இக்காலகட்டத்தில் நிர்வாக மாற்றத்திற்கு மட்டுமே உதவி செய்தார்.
இதன் மூலம் அடுத்த வருடம் தான் கிருதிவாசன் தான் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டத்திற்கான முழு சம்பளத்தைப் பெற்ற உள்ளார். விப்ரோ சிஇஓ-வுக்கு அடிப்படை சம்பளம், பங்குகள் என சுமார் 58 கோடி ரூபாய் வரையில் சம்பளம் பெற வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், கிருதிவாசன் எவ்வளவு சம்பளம் பெறுவார் என்பதை அடுத்த வருடம் பார்ப்போம்.
ஆனால் ஐடி ஊழியர்கள் மத்தியில் டிசிஎஸ் சிஇஓ-வுக்கு சம்பளம் மிக குறைவாக அளிப்பது குறித்த விவாதம் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications