இந்தியாவின மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் சமீபத்தில் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது முதல் சந்தையில் முக்கிய விவாத பொருளாக மாறியுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் வர்த்தக பிரச்சனைகள் தான், இதன் எதிரொலியாக முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்துள்ளது.
இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் நிலைமை இதுதான் என அதன் டிசிஎஸ் கே கிருதிவாசன் கூறியது டிசிஸ் ஊழியர்களை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஐடி நிறுவன ஊழியர்கள், ஐடி நிறுவன முதலீட்டாளர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

டிசிஎஸ் சிஇஓ கே கிருதிவாசன் நடப்பு நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் வளர்ச்சி மிகவும் மந்தமாகவும் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருக்கும் என தெரிவித்தார். இதன் மூலம் டிசிஎஸ் நிர்வாகம் இந்த வருடம் மிகவும் மந்தமான வர்த்தக வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்யும் என கூறப்படுகிறது. முதல் 2 காலாண்டில் முடக்க நிலை வளர்ச்சியை (Muted Growth) பதிவு செய்தது.
அடுத்த 2 காலாண்டில் ஒட்டுமொத்த ஐடி சேவை துறைக்கும் சர்வதேச அளவில் மோசமான காலக்கட்டம் என்பதால் மந்தமான வளர்ச்சியை மட்டுமே டிசிஎஎஸ் எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது என கே கிருதிவாசன் தெரிவித்தார். இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனம் என்பதால் இந்நிறுவனத்தின் வளர்ச்சி தான் ஒட்டுமொத்த இந்திய ஐடி சேவை துறையின் வளர்ச்சியை பிரதிபலிக்கும்.
59 வயதான கே கிருதிவாசன் ஜூன் மாதம் தான் டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக பதவியேற்றினார். இவருடைய பதவி காலம் ஐடி துறைக்கு மிகவும் மோசமாக காலக்கட்டத்தில் இருக்கும் போது வந்துள்ளது, இதனால் யாரும் எதிர்கொள்ளாத சவால்களை ஆரம்பம் முதல் எதிர்கொண்டு வருகிறார்.
மேலும் டிசிஎஸ் வளர்ச்சி குறித்து கிருதிவாசன் கூறுகையில் முதல் அரையாண்டு மோசமான காலக்கட்டம் என சொல்லமாட்டேன், ஆனால் 2வது அரையாண்டு முதல் அரையாண்டை காட்டிலும் மோசமாக தான் இருக்கும் என தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் ஐடி சேவைக்கு அதிகப்படியான டிமாண்ட் இல்லை, ஆனால் சந்தையின் சூழ்நிலை மேம்பட்டால் நிறுத்திவைக்கப்பட்டு உள்ள திட்டங்கள் பலன் அளிக்கும் எனவும் கிருதிவாசன் ஈடி-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications