இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மார்ச் 16 ஆம் தேதி முதல் கே கிருதிவாசன் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டு உள்ளார் என்றும், ராஜேஷ் கோபிநாதன் இப்பதவியை விட்டு வெளியேற உள்ளார் என்றும் அறிவித்தது.
இந்த நிலையில் ஜூன் 1 ஆம் தேதி முதல் டிசிஎஸ்-ன் புதிய சிஇஓ-வாக தனது பணியை துவங்க உள்ளார் தமிழரான கிருதிவாசன். கோவை CIT கல்லூரி மற்றும் ஐஐடி கான்பூர்-ல் படித்து இன்று நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனராக உயர்ந்துள்ளார்.

டிசிஎஸ்-ன் 50 வருட வரலாற்றில் 5வது சிஇஓ-வாக நியமிக்கப்பட்டு உள்ள கே கிருதிவாசன், இதுவரையில் இப்பதவியில் நியமிக்கப்பட்ட சிஇஓ-க்களிலேயே வயதான சிஇஓவாக உள்ளார். இவரின் வயது 58. சிஇஓ பதவிக்கு முன்பு கே கிருதிவாசன் டிசிஎஸ்-ன் முக்கிய வர்த்தக பிரிவான BFSI பிரிவின் தலைவராகவும், மொத்த வருமானத்தில் சுமார் 35 சதவீதத்தை கே கிருதிவாசன் டீம் மட்டுமே கொடுத்தது.
இப்போது மொத்த டிசிஎஸ்-ஐயும் கே கிருதிவாசன் டீம் நிர்வாகம் செய்ய உள்ளது. கே கிருதிவாசன் BFSI பிரிவின் ஒட்டுமொத்த தலைவராக இருந்தாலும் மும்பையிலோ, அமெரிக்காவிலோ இருந்து நிர்வாகம் செய்யாமல் சென்னையில் இருந்தே அசத்தி வந்தார்..
தற்போது சிஇஓ-வாக நியமிக்கப்பட்டதில் இருந்து சென்னையில் இருந்து மும்பைக்கு சென்ற கே கிருதிவாசன் இது நாள் வரையில் டிசிஎஸ் கெஸ்ட் ஹவுஸ்-ல் தங்கி அலுவலகத்திற்கு சென்று வந்த நிலையில், விரைவில் அவருடைய குடும்பமும் சென்னையில் இருந்து மும்பைக்கு வருவதால் புதிய வீட்டை தேட உள்ளார் கே கிருதிவாசன்.
கே கிருதிவாசன் டிசிஎஸ் நிறுவனத்தில் சுமார் 34 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். டிசிஎஸ் நிறுவனத்திற்கு அதிகம் பண வருவாயை அளிக்கும் மிக முக்கியமான BFSI பிரிவின் உலகளாவிய தலைவராக இருந்தார் கே கிருதிவாசன். இதேபோல் டிசிஎஸ் சாம்ராஜ்ஜியத்தின் பேஸ்மென்ட்-ம் BFSI பிரிவு தான்.
கே கிருதிவாசன் திருச்சி மாவட்டத்தின் மேளசிந்தாமணி பகுதியில் இருக்கும் ஈ.ஆர் மேல்நிலை பள்ளியில் தான் பள்ளி கல்வியை 1975 முதல் 1981 வரையில் முடிந்தார். இதை தொடர்ந்து கோயம்புத்தூர்-ல் இருக்கும் கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் பிஈ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் 1981 - 1985 பெற்றார். இதை தொடர்ந்து ஐஐடி கான்பூர் கல்லூரியில் M tech, Industrial and management Engineering பிரிவில் பட்டம் பெற்றார்.
டாடா சன்ஸ் தலைவரான என் சந்திரசேகரன் கோயம்புத்தூர்-ல் இருக்கும் கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் 1983 ஆம் ஆண்டு அப்ளைய்டு சையின்ஸ் பிரிவில் பட்டம் பெற்றார். அப்படி பார்த்தால் என் சந்திரசேகரன் அவர்களின் ஜூனியர் மாணவர் தான் கே கிருதிவாசன். இருவருக்கும் இப்படி ஒரு தொடர்பு உள்ளது சுவாரஸ்யமானது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications