TCS நிறுவனத்தின் CEO சம்பளம் எவ்வளவு..? இன்ஃபோசிஸ், விப்ரோ CEO-வை விட இவ்வளவு கம்மியா..?

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS). கே.கிருத்திவாசன் டிசிஎஸ் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றுகிறார். இதற்கு முன், இவர் நிறுவனத்தில் பல்வேறு மூத்த பதவிகளில் பணியாற்றியுள்ளார். 1989 ம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனத்தில் பயிற்சிப் பணியாளராக சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து தலைமை செயல் அதிகாரி பதவிக்கு வந்துள்ளார். தலைமை நிர்வாக அதிகாரியாக மாறுவதற்கு முன்பு கிருத்திவாசன் வகித்த மிக முக்கியமான பங்கு BFSI இன் உலகளாவிய தலைவராகும். இது டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 30% க்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் ஒரு துறையாகும்.

TCS நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிருத்திவாசனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?: மார்ச் 2023ஆம் ஆண்டு ராஜேஷ் கோபிநாதன் திடீரென வெளியேறியதைத் தொடர்ந்து, கிருத்திவாசன் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டு, ஜூன் 1, 2023 அன்று டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றார்.

TCS நிறுவனத்தின் CEO சம்பளம் எவ்வளவு..? இன்ஃபோசிஸ், விப்ரோ CEO-வை விட இவ்வளவு கம்மியா..?

இந்த டிசிஎஸ் நிறுவனம் அந்நிறுவனம் 30 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேலான வருமானம் பெற்று வருகிறது. இவ்வளவு பெரிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என்பதால், அவர் நிச்சயம் கோடிக்கணக்கான சம்பளம் பெறுவார் என்று நினைப்பீர்கள். ஆனால், இவர் மிகவும் உயர்ந்த சம்பளத்துடன் உள்ள டெக் தலைவர்களில் ஒருவரும் இல்லை.

கே.கிருத்திவாசன் பெற்ற வருமானம் ரூ.26.5 கோடியாகும். இது கடந்தாண்டை விட 4.6% உயர்வாகும். கிருத்திவாசனின் இழப்பீட்டுத் தொகுப்பில் அடிப்படை சம்பளம் ரூ.1.39 கோடி, சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகளாக ரூ.2.13 கோடி மற்றும் கமிஷனாக ரூ.23 கோடி ஆகியவை அடங்கும். அவரது மொத்த சம்பளம் டிசிஎஸ்ஸின் 6.07 லட்சம் ஊழியர்களின் சராசரி சம்பளத்தை விட கிட்டத்தட்ட 330 மடங்கு அதிகமாகும். மேலும், முக்கிய தொகை கமிஷனாக வழங்கப்படுகிறது. ஆனால், இன்ஃபோஸில் தலைவர் சலில் பரேக், ரூ.80.6 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. விப்ரோ தலைவர் ஸ்ரீநிவாஸ் பல்லியா, ரூ.53.6 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.

இன்ஃபோஸில் நிறுவனம் தயாரிப்பு சார்ந்த ஊக்கங்களை (performance + equity) அதிகரித்து உயர்ந்த சம்பளங்களை வழங்குகிறது. ஆனால், டிசிஎஸ் குறைவான சம்பளம். ஆனால் நிலையான வருமானம் என்ற உறுதிப்பாட்டில் இருக்கிறது. எதிர்கால TCS தலைமை அதிகாரிகளுக்கு (CEOs) ஒரு புதிய நம்பிக்கை இருக்கலாம். டிசிஎஸ் தலைவரான சந்திரசேகரன், Tata Sons-க்கு சென்ற பிறகு, டாடா குழுமம் பங்குச் சம்பள திட்டங்களை (Equity Compensation) ஏற்கும் நிலைக்கு வந்துள்ளது.

டிசிஎஸ் தற்போது முழுமையாக பண சம்பள முறை (cash-only model) பயன்படுத்தினாலும், டாடா குழுமத்தின் மற்ற நிறுவனங்கள் பங்கு ஊக்கத்திட்டங்களை (Equity-linked plans) ஏற்கத் தொடங்கியுள்ளன. இது டிசிஎஸ் நிறுவனத்திற்கு எதிர்காலத்தில் ஒரு மாற்றத்தின் வாசல் திறக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. தொழில்நுட்பங்களில் விரைவான மாற்றங்கள் இருந்தபோதிலும், டிசிஎஸ் நிறுவனம் அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதலீட்டை (R&D) குறைத்தது. R&D மற்றும் புதுமைச் செலவு FY24 இல் ரூ.2,751 கோடியில் இருந்து FY25 இல் ரூ.2,630 கோடியாகக் குறைந்தது. மொத்த வருவாயில், R&D செலவினம் ஆண்டுக்கு ஆண்டு 1.1 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+