டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து அதன் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் வெளியேறுவது இத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.
ராஜேஷ் கோபிநாதன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து கே கிருதிவாசன் புதிய டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரியாக இன்று மார்ச் 16 ஆம் தேதி பெறுப்பேற்கிறார்.
கிருதிவாசன் தற்போது நிறுவனத்தின் பிரசிடென்ட் மட்டும் அல்லாமல் வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீடு (BFSI) வணிக பிரிவின் உலகளாவிய தலைவராக உள்ளார். மேலும் கிருதிவாசன் இந்நிறுவனத்தில் சுமார் 34 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.
என். சந்திசேகரன்
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திசேகரன் பெறுப்பேற்ற போது டாடா குழுமத்தில் அதிகம் லாபம் ஈட்டும் நிறுவனமாக இருந்தது அவர் தலைமை வகித்த டாடா கன்சல்டனசி நிறுவனம் தான். சந்திரசேகரன் வெளியேறிய போது மிகவும் நம்பிக்கை உடன் டிசிஎஸ் சிஇஓ பதிவியை ராஜேஷ் கோபிநாதன்-க்கு கொடுத்தார்.
ராஜேஷ் கோபிநாதன்
இதை தொடர்ந்து டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் உயர்ந்து இதன் வளர்ச்சிக்கு முழு முக்கிய காரணமாக இருந்தது மட்டும் அல்லாமல், இந்திய ஐடி துறையில் டிசிஎஸ் தனது ஆதிக்கத்தை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து வலிமையுடன் டிசிஎஸ் இன்று வரையில் இயங்கி வருகிறது.
கொரோனா தொற்று காலம்
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாகிய நிலையில் ஐடி நிறுவனங்கள் என்ன செய்வது என தெரியாமல் புலம்பிக்கொண்டு இருந்த வேளையில் டிசிஎஸ் சிஇஓ-வாக ராஜேஷ் கோபிநாதன் எடுத்த முடிவுகள் அனைத்தும் பாராட்டத்தக்கது. டிசிஎஸ் நிறுவனத்தின் அறிவிப்புக்கு பின்பு தான் அனைத்து முன்னணி ஐடி சேவை நிறுவனங்களும் வொர்க் ப்ரம் ஹோம் கொடுத்தது.
டிசிஎஸ் ராஜேஷ் கோபிநாதன்
ராஜேஷ் கோபிநாதன் 22 ஆண்டுகாலம் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பிறகு இந்நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார். இதில் 6 வருடம் டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ ஆக பணியாற்றியுள்ளார். ராஜேஷ் கோபிநாதன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தாலும் செப்டம்பர் மாதம் வரையில் இந்நிறுவன பணியில் இருப்பார்.
கிருதிவாசன் தலைமை
மார்ச் 16 ஆம் தேதி முதல் கிருதிவாசன் டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக பொறுப்பேற்கிறார். இதன் மூலம் டிசிஎஸ் இனி கிருதிவாசன் தலைமையில் வேகமாக வளர உள்ளது.


Click it and Unblock the Notifications