இந்தியாவில் கொரோனா தொற்றுக் காரணமாக அனைத்து துறைகளும் வர்த்தகத்தை இழந்து அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்திய ஐடி துறை ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற முடியும் என்பதால் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருந்து வருகிறது. இதோடு ஐடி துறையில் வேலைவாய்ப்புகள் இழந்தோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் மூலம் உலக நாடுகளில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் வர்த்தகம் பாதிக்காமல் இருக்க அதிகளவிலான ஆட்டோமேஷன் சேவைகளைப் பெறத் துவங்கியுள்ளது, இது இந்திய ஐடி நிறுவனங்களுக்குச் சாதகமாக மாறியுள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் ஐடி நிறுவனங்கள் வழக்கத்தை விடவும் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று அசத்தியுள்ளது. இதன் வாயிலாக டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ-வின் சம்பளம் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 54 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
டாடா கன்சல்டென்சி சர்வீசஸ்
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமாக விளங்கும் டாடா கன்சல்டென்சி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் ராஜேஷ் கோபிநாதன்-ன் 2020-21ஆம் நிதியாண்டுக்கான சம்பள அளவீடுகள் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த வருடம் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்ற காரணத்தால் டிசிஎஸ் நிறுவனத்தின் லாபம் மற்றும் வருவாய் அதிகரித்துள்ள காரணத்தால் இவரின் சம்பளமும் உயர்ந்துள்ளது.
சிஇஓ ராஜேஷ் கோபிநாதன்
ராஜேஷ் கோபிநாதன் 2019-20ஆம் நிதியாண்டில் வாங்கிய சம்பளத்தை ஒப்பிடுகையில் மார்ச் 31 உடன் முடிந்த 2020-21 நிதியாண்டில் இவருடைய சம்பளம் சுமார் 54 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் இவரது மொத்த சம்பளம், கமிஷன், போனஸ் ஆகியவற்றைச் சேர்த்து சுமார் 20 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தைக் கடந்த நிதியாண்டில் பெற்றுள்ளார்.
ராஜேஷ் கோபிநாதன்-ன் சம்பளம்
ராஜேஷ் கோபிநாதன்-ன் சம்பளத்தில் பெரும் பகுதி அவருடைய கமிஷன் தொகையைச் சார்ந்து உள்ளது. கமிஷன் என்பது டிசிஎஸ் நிறுவனத்தின் வருடாந்திர லாப அளவீட்டில் ஒரு குறிப்பிட்ட சதவீத்தை சிஇஓ-வான ராஜேஷ் கோபிநாதன்-க்கு வழங்கப்படுகிறது. இதன் படி 2020-21 நிதியாண்டு சம்பளத்தில் சுமார் 17 கோடி ரூபாயைத் தொகையைக் கமிஷனாகவே பெற்றுள்ளார்.
அடிப்படை சம்பளம்
தற்போது வெளியான தகவல்கள் படி ராஜேஷ் கோபிநாதன் 2020-21ஆம் நிதியாண்டில் அடிப்படை சம்பளமாக 1.27 கோடி ரூபாயை பெற்றுள்ளார் கடந்த ஆண்டு இது 1.3 கோடி ரூபாயாக இருந்தது. இதேபோல் பெனிபிட்ஸ் ஆகியவற்றின் கீழ் 2 கோடி ரூபாய் பெற்றுள்ளார் இது கடந்த ஆண்டு 1.3 கோடி ரூபாயாக இருந்தது.
லாபத்தில் கமிஷன்
5வது வருடமாகச் சிஇஓ-வாகப் பணியாற்றும் ராஜேஷ் கோபிநாதன் கடந்த ஆண்டு கமிஷன் தொகையாக 17 கோடி ரூபாயை பெற்றுள்ளார், இது முந்தைய ஆண்டில் 10 கோடி ரூபாயாக இருந்தது. இதேபோல் 2019-20ஆம் நிதியாண்டில் இவருடைய மொத்த சம்பளம் 13.3 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 54 சதவீத உயர்வில் 20 கோடி ரூபாயை பெற்றுள்ளார்.
COO என்.ஜி.சுப்பிரமணியம்
இவரைத் தொடர்ந்து டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான என்.ஜி.சுப்பிரமணியம் அவர்களின் கடந்த நிதியாண்டுக்கான சம்பளம் மட்டும் 60 சதவீதம் வரையில் உயர்ந்து 16 கோடி ரூபாயைத் தொகையைச் சம்பளமாகப் பெற்றுள்ளார்.
326.8 மடங்கு அதிகச் சம்பளம்
மார்ச் 31 முடிவில் டிசிஎஸ் நிறுவனத்தில் சுமார் 4,88,650 ஊழியர்கள் பணியாற்றி வரும் வேளையில் இந்திய ஊழியர்கள் சராசரியாக 5.2 சதவீதமும், வெளிநாட்டில் இருக்கும் ஊழியர்கள் 2-6 சதவீதம் அளவிலான சம்பள உயர்வைப் பெறுகின்றனர். இதன் மூலம் டிசிஎஸ் ஊழியர்களுக்கும், சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் அவர்களின் சம்பளத்திற்கு 326.8:1 அளவு வித்தியாசம் உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications