TCS நிறுவனத்தின் இன் தலைமை மனித வள அதிகாரி (CHRO) மிலிந்த் லக்காடிடம் ஒரு நேர்காணலில் கேள்வி எழுப்பப்பட்ட போது, பிரஷ்ஷர்களுக்கான வருடாந்திர சம்பளத்தை ரூ.3-4 லட்சத்திலிருந்து ஏன் பல ஆண்டுகளாக அதிகரிக்கவில்லை என்று கேட்கப்பட்டது. இவருடைய பதில் சமூக ஊடகங்களில் வைரலானது.
மிலிந்த் லக்காட் கொடுத்த பதில், நாங்கள் திறமையின் அடிப்படையில் சம்பளத்தை அளிக்கிறோம், மேலும் வெவ்வேறு கேடர்களில் வருவதற்குப் பட்டதாரிகளை ஊக்குவிக்கிறோம்," என்று லக்காட் கூறினார்.

இன்னோவேட்டார்ஸ் பிரிவில் வரும் பிரஷ்ஷர்களுக்கு நாங்கள் 10 லட்சம் ரூபாய் வரையிலான சம்பளத்தை வழங்குகிறோம். இப்பிரிவில் பெரும்பாலும் NIT மற்றும் IIT களில் இருந்து ஆட்களை வேலைக்கு அமர்த்துகிறோம், அங்கு நாங்கள் அதிகச் சம்பளம் கொடுத்து வருகிறோம் என விளக்கம் கொடுத்தார்.
இதேபோல் பல ஆண்டுகளாகப் பிரஷ்ஷர்களின் சம்பளம் மாறாமல் இருப்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். மேலும் பிரஷ்ஷர்கள் பணியில் சேரும்போதே அவர்களுக்கு இந்தப் பாதையில் பயணித்தால் அவர்களின் சம்பளம் இரட்டிப்பாகும் என நாங்கள் உணர்த்துகிறோம் எனவும் மிலிந்த் லக்காட் விளக்கம் கொடுத்தார்.
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையானது இன்று நாட்டில் அதிகச் சம்பளம் தரும் வேலைவாய்ப்புகளை அதிகளவில் ஒவ்வொரு வருடமும் உருவாக்கி வருகிறது. ஆனால் புதிதாக ஐடித் துறையில் சேரும் பிரஷ்ஷர்களுக்கான சம்பளம் நீண்ட காலமாகத் தேக்கமடைந்து வருவது மட்டும் அல்லாமல் பணவீக்க அடிப்படையில் எவ்விதமான மாற்றமும் அடையவில்லை.
பிரஷ்ஷர்களுக்கான சம்பளம் நீண்ட காலமாக மாறாமல் இருப்பது குறித்துக் கல்லூரி பட்டதாரிகள், ஆர்வலர்கள் மற்றும் வல்லுநர்கள் பல ஆண்டுகளாக எவ்வாறு அதிகரிக்கவில்லை என்பது குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர். வாரம் 70 மணிநேரம் பணியாற்ற கூறும் இன்போசிஸ் நாராயணமூர்த்திக் கூட இதுக்குறித்துப் பேசமால் இருக்கிறார்.
அமெரிக்காவில் எப்படி டாப் டெக் நிறுவனங்களை FAANG என அழைக்கப்படுகிறதோ, இந்தியாவில் டாப் ஐடி சேவை நிறுவனங்களை
WITCH நிறுவனங்கள் என அழைக்கப்படுகிறது. இதில் விப்ரோ, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், காக்னிசன்ட் மற்றும் எச்சிஎல் ஆகியவை உள்ளது.
புதிய வர்த்தகத்தைப் பெறுவதில் குடியடி சண்டையிடும் விப்ரோ, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், காக்னிசன்ட் மற்றும் எச்சிஎல் நிறுவனங்கள், பிரஷ்ஷர்களுக்குச் சம்பளம் கொடுப்பதில் மட்டும் மிகவும் ஒத்துமையாக உள்ளனர். கடந்த 15 வருடங்களுக்காகப் பிரஷ்ஷர்களுக்கான சம்பளம் 2.85 லட்சம் ரூபாயில் இருந்து 3.8 லட்சம் ரூபாய் அளவிலேயே உள்ளது.
விப்ரோ, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், காக்னிசன்ட் மற்றும் எச்சிஎல் ஆகிய 5 நிறுவனங்கள் மட்டுமே குறிவைத்து பேச முக்கியமான காரணம், ஒவ்வொரு வருடமும் அதிகப்படியான ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புக் கொடுப்பது இந்த 5 நிறுவனங்கள் தான்.
இதனால் பல வருடங்களாகப் பிரஷ்ஷர்களுக்கான சம்பளத்தை மாற்றாமல் இருப்பது ஐடி சேவை துறையின் மேஜர் நிறுவனங்களுக்குப் பெரும் சர்ச்சையாகவே பார்க்கப்படுகிறது. இந்த 5 நிறுவனங்கள் பிரஷ்ஷர்களுக்கான சம்பளத்தை உயர்த்தினால் மற்ற அனைத்துத் துறை நிறுவனங்களும் தங்களுடைய சம்பளத்தை உயர்த்தும் என்பதே பட்டதாரிகளின் ஏக்கம்.


Click it and Unblock the Notifications