இந்திய ஐடி துறையின் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் கடந்த ஒரு வாரமாக மக்கள் மத்தியில் பேசுபொருளாக உள்ளது. கடந்த வாரம் 12000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது, அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த பிரச்சனையை சரி செய்ய மத்திய அரசு முதல் கர்நாடக அரசு வரையில் டிசிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் டிசிஎஸ் முக்கியமான செய்தியை வெளியிட்டுள்ளது.
பென்ச் ஊழியர்களையும், ஏஐ துறையில் திறன் இல்லாத மிட் லெவல், சீனியர் ஊழியர்களையும் பணியில் இருந்து நீக்குவதற்கு தயாராகி வரும் டிசிஎஸ் நிர்வாகம், ஒரு முக்கியமான வாக்குறுதியை அளித்துள்ளது.

டிசிஎஸ் நிறுவனம் சுமார் 600க்கும் மேற்பட்ட அனுபவம்வாய்ந்த ஊழியர்களுக்கு பணியில் அமர்த்துவதற்கான ஆஃபர் லெட்டரை கொடுத்துள்ள நிலையில், இவர்களுக்கு பணியில் சேர்வதற்கான நாள் அறிவிக்காமலேயே இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த 600 பேருக்கும் பணிகளை வழங்கும் என்று உறுதியளித்துள்ளது. இதை நிறுவனம் தொழிலாளர் அமைச்சகத்திற்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு, TCS-இன் ஒரு பேச்சாளர் கூறியதாவது, "TCS-லிருந்து வேலை அழைப்பு பெற்ற அனைவரும் சேர்க்கப்படுவார்கள். சேர்க்கை தேதிகள் நிறுவனத்தின் வர்த்தக தேவைகளை பொறுத்து முடிவு செய்யப்படுகின்றன, சில சமயங்களில் அவை வணிக தேவைகளுக்கு ஏற்ப மாற்றப்படலாம்."
ஆகஸ்ட் 1ஆம் தேதி மத்திய தொழிலாளர் துறை அமைச்சகத்தில் தலைமை தொழிலாளர் கமிஷ்னர் அலுவலக அதிகாரிகள் மற்றும் NITES அமைப்பின் மூத்த நிர்வாகிகள் உடன் சந்திப்பு நடந்தது. இக்கூட்டத்தில் டிசிஎஸ் 600 ஊழியர்களுக்கு பணியில் சேரும் நாள் அளிக்காதது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இந்த 600 ஊழியர்கள் 2-18 வருட அனுபவம் கொண்டவர்களாகும், மேலும் இவர்கள் பெங்களூர், ஹைதராபாத், புனே, கொல்கத்தா, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் பணியில் அமர்த்தப்படக்கூடியவர்கள். டிசிஎஸ் நிறுவனத்தின் செய்திதொடர்பாளர்களும் வர்த்தக சூழ்நிலை அடிப்படையில் இவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என உறுதியளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications