டிசிஎஸ் ஊழியர்கள் அதிர்ச்சி.. சீனியர் ஊழியர்களுக்கு வேரியபிள் பே கட்..!!

இந்தியாவின் முவேரியபிள்ன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), தனது சீனியர் லெவல் ஊழியர்களுக்கு வழங்கும் காலாண்டு வேரியபிள் பே (Quarterly Variable allowance) தொடர்ந்து மூன்றாவது முறையாக குறைத்துள்ளது. இந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டிலும் இந்த குறைப்பு நடவடிக்கை தொடர்கிறது. அதே நேரத்தில், நிறுவனம் இந்த நிதியாண்டுக்கான ஊதிய உயர்வு மதிப்பாய்வையும் தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

சீனியர் ஊழியர்கள் தொடர்ச்சியாக தங்கள் வேரியபிள் பே குறைப்பை சந்திப்பது இது மூன்றாவது முறை அதாவது, மூன்றாவது காலாண்டாகும். பெரும்பாலான சீனியர் ஊழியர்கள், கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டிற்கான தங்களது வேரியபிள் பே ஊதியத்தில் வெறும் 20 முதல் 30 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளனர். இதற்கு முந்தைய காலாண்டுகளிலும் அவர்கள் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப முழுமையாக பணியாற்றியிருந்த போதிலும், அவர்களின் வேரியபிள் பே சுமார் 60 முதல் 80 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்பட்டதாக ஊழியர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

டிசிஎஸ் ஊழியர்கள் அதிர்ச்சி.. சீனியர் ஊழியர்களுக்கு வேரியபிள் பே கட்..!!

இதுகுறித்து சீனியர் அதிகாரி ஒருவர் கூறுகையில், எங்களைப் போன்ற சீனியர் ஊழியர்களின் மொத்த ஊதியத்தில் (CTC) 15 முதல் 20 சதவீதம் வரை வேரியபிள் பே நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், நிறுவனம் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த காலாண்டு வேரியபிள் பே-வை முறையாக வழங்காமல் குறைத்து வருகிறது. உதாரணமாக, கடந்த காலாண்டில் எனக்கு வழங்கப்பட்ட வேரியபிள் பே எனது தகுதி ஊதியத்தில் வெறும் 20 சதவீதம் மட்டுமே என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதுகுறித்து டிசிஎஸ் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் விளக்கம் கேட்கப்பட்ட நிலையில், நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அளித்த பதிலில், உங்கள் கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் தவறானவை. எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 70 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு அவர்களின் முழுமையான QVA (காலாண்டு வேரியபிள் பே) வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியிருக்கும் ஊழியர்களின் QVA, அவர்கள் சார்ந்திருக்கும் பிரிவின் வணிகச் செயல்திறனைப் பொறுத்து மாறுபடும். இது ஒவ்வொரு காலாண்டிலும் நாங்கள் பின்பற்றும் ஒரு நிலையான நடைமுறைதான் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இருப்பினும், டிசிஎஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணியாளர்களில் பெரும்பாலோர் ஜூனியர் மற்றும் ஆரம்ப கட்ட தொழில் வல்லுநர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலை ஊழியர்களின் சம்பளத்தில் வேரியபிள் பே மிகக் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கும்.

மேலும் அந்த அதிகாரி கூறுகையில், ஜூனியர் ஊழியர்களின் சம்பளத்தில் வேரியபிள் பே என்ற ஒன்று பெரும்பாலும் இல்லை. ஒருவேளை மிகச் சிறிய அளவில் இருந்தாலும், அதனால் அவர்களுக்கு பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது என்று கூறினார்.

கடந்த ஆண்டு, டிசிஎஸ் நிறுவனம் ஒரு புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஊழியர்களின் அலுவலக வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் அவர்களின் வேரியபிள் பே கணக்கிடப்பட்டது. வேரியபிள் பே பெற தகுதி பெற வேண்டுமென்றால், ஊழியர்கள் ஒவ்வொரு காலாண்டிலும் குறைந்தபட்சம் 60 சதவீத வருகைப் பதிவை அலுவலகத்தில் கொண்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இதனை ஊழியர்கள் பின்பற்றி வந்தனர்.

மேலும் புதுப்பிக்கப்பட்ட எச்ஆர் கொள்கையின்படி, ஒரு காலாண்டில் முழு வேரியபிள் பே பெற விரும்பும் ஊழியர்கள் குறைந்தபட்சம் 85 சதவீத வருகைப் பதிவை அலுவலகத்தில் பராமரிக்க வேண்டும். இந்த விதிமுறையைத் தொடர்ந்து மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் அந்த கொள்கை எச்சரிக்கிறது.

அலுவலக வருகைப் பதிவேட்டில் 75 முதல் 85 சதவீதம் வரை உள்ள ஊழியர்கள் தங்களது வேரியபிள் பே 75 சதவீதத்தைப் பெறுவார்கள். அதே சமயம், 60 முதல் 75 சதவீதம் வரை வருகைப் பதிவு வைத்திருப்பவர்கள் தங்களது வேரியபிள் பே-ல் 50 சதவீதத்தை மட்டுமே பெறுவார்கள் என்று நிறுவனத்தின் சுற்றறிக்கை ஒன்றில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு தாமதம் மற்றும் எதிர்கால ஆட்சேர்ப்பு திட்டங்கள்: சமீபத்தில், டிசிஎஸ் நிறுவனம் இந்த ஆண்டுக்கான ஊதிய உயர்வை தாமதப்படுத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வழக்கமாக, இந்த தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் இருந்து தனது ஊழியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வை வழங்குவது வழக்கம்.

இதுகுறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி மிலிந்த் லக்காட் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், தற்போதைய பொருளாதாரச் சூழலில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக, இந்த ஆண்டு ஊதிய உயர்வு குறித்து நாங்கள் மிகவும் கவனமாக முடிவெடுக்க வேண்டியுள்ளது. வணிகச் சூழல் சாதகமாக மாறும் பட்சத்தில், இது எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்று தெரிவித்தார்.

தற்போது உலகளாவிய தகவல் தொழில்நுட்ப சேவைத் துறை பல்வேறு பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் நிலவும் பொருளாதார மந்தநிலை மற்றும் பல்வேறு நாடுகளில் விதிக்கப்படக்கூடிய வரிகள் போன்ற காரணங்களால் ஒருவித நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இருப்பினும், நான்காவது காலாண்டின் முடிவில் டிசிஎஸ் நிறுவனம் கணிசமான அளவிலான புதிய ஒப்பந்த வாய்ப்புகளைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக, இந்த முறை தேவை தொடர்பான நிச்சயமற்ற தன்மைகள் நீண்ட காலம் நீடிக்காது என்று டிசிஎஸ் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், டிசிஎஸ் நிறுவனம் அடுத்த நிதியாண்டான 2026ல் சுமார் 42,000 அல்லது அதற்கு மேற்பட்ட புதிய பட்டதாரிகளைப் பணியமர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்நிறுவனம் 625 புதிய ஊழியர்களைச் சேர்த்தது. முழு நிதியாண்டு 2025லும், டிசிஎஸ் மொத்தம் 6,433 ஊழியர்களைப் புதிதாக பணியமர்த்தியுள்ளது. இந்த தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளின் மூலம், டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை தற்போது 6,07,979 ஆக உயர்ந்துள்ளது. இது இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக பார்க்கப்படுகிறது.

டிசிஎஸ், சீனியர் ஊழியர்களுக்கான காலாண்டு வேரியபிள் பே ஊதியத்தை தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக குறைத்துள்ளது. பல மூத்த ஊழியர்கள் நான்காவது காலாண்டில் 20-30% மட்டுமே பெற்றுள்ளனர். இது அவர்களின் சம்பளத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நிறுவனம் 70% ஊழியர்களுக்கு முழு வேரியபிள் பே வழங்கியதாகக் கூறினாலும், பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக வருடாந்திர ஊதிய உயர்வு தாமதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிக்கன நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், டிசிஎஸ் அடுத்த நிதியாண்டில் அதிக எண்ணிக்கையிலான புதியவர்களை பணியமர்த்தவும், வலுவான ஒப்பந்த வாய்ப்புகளைப் பெறவும் திட்டமிட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+