இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இதன் பிரபலமான தலைமை இயக்க அதிகாரி (சிஓஓ) மற்றும் நிர்வாக இயக்குனரான என்.கணபதி சுப்ரமணியம் இந்த நிறுவனத்தில் 40 ஆண்டு காலம் பணியாற்றிவிட்டு அடுத்த மாதம் ஓய்வு பெறுவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
என்.கணபதி சுப்ரமணியம் டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரனின் மூத்த சகோதரர் ஆவார், டிசிஎஸ் நிறுவனத்தில் பல பிரிவுகளில் பணியாற்றியது மட்டும் அல்லாமல் டாடா குழுமத்தின் பல நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் என்.கணபதி சுப்ரமணியம் இடத்தில் அடுத்து யாரை நியமிக்கப்படுகிறது என்ற கேள்விக்கு முக்கியமான பதிலைக் கொடுத்துள்ளது.

டிசிஎஸ் நிர்வாகம், என்.கணபதி சுப்ரமணியனுக்குப் பதிலாக இந்த பதவியில் யாரையும் நியமிக்கத் திட்டமிடவில்லை என்றும், இவருடைய பணிகளைப் பிற மூத்த அதிகாரிகளுக்குப் பங்கீடு செய்வதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் டிசிஎஸ் நிறுவனத்தில் COO பதவி இனி நடைமுறையில் இருந்து நீக்கப்படும்.
டிசிஎஸ் சிஇஓ கே.கிருத்திவாசன் மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் "என்.கணபதி சுப்ரமணியம் பல விஷயங்களைச் செய்து வருகிறார், அவரை எந்த ஒரு தனிநபராலும் ரீப்பிளேஸ் செய்ய முடியாது, எங்களுடைய தற்போதைய திட்டத்தின் படி எங்கள் தலைமைக் குழு, அவர் செய்து வரும் பணியைப் பங்கீடு செய்யக்கொள்ள உள்ளோம், மேலும் புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்க நாங்கள் விரும்பவில்லை," என்று கூறினார்.
2021 டிசம்பரில் இன்போசிஸ் நிறுவனம் சிஓஓ என்ற பணியிடத்தை நீக்கியது. இதைத் தொடர்ந்து 2வது ஐடி நிறுவனமாக சிஓஓ பதவியைத் தேவையற்றதாக மாற்றியது டிசிஎஸ். யுபி பிரவின் ராவ் அந்த நேரத்தில் இன்ஃபோசிஸ் பதவியை வகித்தார், இவருக்குப் பின்பு இப்பதவியில் யாரையும் நியமிக்கவில்லை.
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிறந்த டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரனின் மூத்த சகோதரர் தான் என்.கணபதி சுப்ரமணியம். இவர் பிப்ரவரி 2017 இல் TCS இன் COO ஆக நியமிக்கப்பட்டு, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக டிசிஎஸ் நிறுவனத்தில் பல்வேறு முக்கிய பணிகளில் பணியாற்றி வருகிறார்.
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் முதுகலை முடித்த பிறகு 1982 இல் டிசிஎஸ்-ல் சேர்ந்தார் சுப்ரமணியம், இதை தொடர்ந்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் வளரும் நிறுவனங்களுக்கான நிர்வாகத் திட்டம் உட்பட பல்வேறு பயிற்சித் திட்டங்களில் கலந்து கொண்டார். 1959 இல் பிறந்த சுப்பிரமணியம் தனது மனைவி ஷோபனா மற்றும் இரண்டு மகன்களுடன் பெங்களூருவில் வசித்து வருகிறார்.
சுப்பிரமணியம் நவம்பர் 2014 முதல் டாடா எல்க்ஸி லிமிடெட்டின் கூடுதல் இயக்குநராகவும் தலைவராகவும் உள்ளார் மற்றும் டிசம்பர் 2021 முதல் டாடா கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட்டின் கூடுதல் இயக்குநராக உள்ளார்.
கணபதி சுப்ரமணியம் சிஓஓ பதவியை எடுப்பதற்கு முன்பு, டிசிஎஸ்-ன் மூலோபாய வணிகப் பிரிவான டிசிஎஸ் பைனான்சியல் சொல்யூஷன்ஸின் நிர்வாகத் துணைத் தலைவராகவும், தலைவராகவும் பணியாற்றினார். இதோடு BFSI, டெலிவரி, பிஸ்னஸ் டெவலப்மென்ட் என பல பிரிவுகளில் பணியாற்றியுள்ளார்.


Click it and Unblock the Notifications