இந்தியாவில் அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக இருந்து வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதிக லாபம் ஈட்டும் நிறுவனம் என்ற குறியீட்டை தற்போது இழந்துள்ளது.
அதற்கு பதிலாக தற்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம், கடந்த மார்ச் 2020ம் காலாண்டில் அதனை தட்டி சென்றுள்ளது.
கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் வரிக்கு பிறகு 8,049 கோடி ரூபாய் லாபம் கண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இரு நிறுவனங்களும் நஷ்டம் தான்
இதே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வரிக்கு பிறகு 6,348 கோடி ரூபாய் லாபத்தினை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது மார்ச் காலாண்டில் 39% வீழ்ச்சி கண்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரம் டிசிஎஸ் நிறுவனம் வீழ்ச்சி கண்டிருந்தாலும், 1% தான் வீழ்ச்சி கண்டுள்ளது.
டிசிஎஸ்-ஐ வி பெரிய நிறுவனம்
கிட்டதட்ட இரண்டு தசாப்தங்களாக தனியார் துறையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், மிகவும் இலாபகரமான நிறுவனமாக இருந்து வருகிறது. முகேஷ் அம்பானியின் கட்டுப்பாட்டில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் டிசிஎஸ்-ஐ விட இயக்க லாபம், நிகர மதிப்பு, சொத்துக்கள் மற்றும் சந்தை மூலதனம் போன்ற அளவுருக்களில் அதிகமாக இருந்து வருகிறது.
வருட நிகரலாபம்
இதே கடந்த நிதியாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 39,354 கோடி ரூபாயாக லாபம் கண்டுள்ளது. இதே டிசிஎஸ் நிறுவனம் 32,340 கோடி ரூபாயாக லாபம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 30 காலாண்டுகளில் முதல் முறையாக வருட அடிப்படையில் நிகர லாபம் கடந்த நிதியாண்டில் தான் குறைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
அதிகரிக்கும் சந்தை மூலதனம்
அதுமட்டும் அல்ல இந்த நிறுவனங்களில் சந்தை மூலதனமும் குறைந்துள்ளது. டிசிஎஸ் நிறுவனம் 2012 தொடங்கி, ஐந்து ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வந்தது. ஆனால் 2018-ன் தொடக்கத்தில் இருந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முன்னேற்றம் கடந்தது. ஏனெனில் அதன் முதலீட்டாளர்கள், அதன் வெற்றிகரமான நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் வெற்றியை கொண்டாடினர்.
சந்தை மூலதனம் எவ்வளவு
சவுதி அராம்கோவிற்கு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதன் பங்கு விற்பனை செய்த போது, அந்த நிறுவனத்தின் கடன் குறையும் என்ற எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள், ரிலையன்ஸ் நிறுவனத்தில் பங்குகளை வாங்கி குவித்தனர். இதனால் அதன் பங்கு விலையானது அதிகரிக்க தொடங்கியது. அதனால் அதன் சந்தை மூலதனமும் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் தற்போதைய பங்கு விலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 9.3 டிரில்லியன் ரூபாயாகவும், இதே டிசிஎஸ்ஸின் சந்தை மூலதனம் 7.6 டிரில்லியன் ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications