திடீரென போனஸ் தொகையை குறைத்த TCS..!! காரணத்தை கேட்டு ஊழியர்கள் அதிர்ச்சி..!!

இந்தியாவில் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக டிசிஎஸ் நிறுவனம் செய்யப்பட்டு வருகிறது. டிசிஎஸ் நிறுவனம் கொரோனா காலத்தில் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி வழங்கியது. பெருந்தொற்று முடிந்து உலகம் இயல்பு நிலைக்கு திரும்பியதை அடுத்து ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என டிசிஸ் நிறுவனம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.

அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்டவற்றில் முன்னுரிமை அளிக்கப்படும் என டிசிஎஸ் நிறுவனம் அறிவித்தது. இருந்தாலும் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதையே விரும்புவதால் ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவழைக்க டிசிஎஸ் நிறுவனம் ஒரு மறைமுக நடவடிக்கையை எடுத்து ஊழியர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

திடீரென போனஸ் தொகையை குறைத்த TCS..!!  காரணத்தை கேட்டு ஊழியர்கள் அதிர்ச்சி..!!

டிசிஎஸ் நிறுவன ஊழியர்களுக்கு ஒவ்வொரு காலாண்டுக்கும் Variable allowance என்பது வழங்கப்படும். நிறுவன செயல் திறன், குழுவின் செயல்திறன், ஊழியரின் செயல்திறன் ஆகியவற்றை எல்லாம் அடிப்படையாக கொண்டு ஒரு போனஸ் தொகை போல இது வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஜனவரி முதல் மார்ச் மாத காலாண்டுக்கான வேரியபிள் அலோவென்ஸ் ஏப்ரல் மாத சம்பளத்தில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. சராசரியாக 80 சதவீதம் வரை இந்த வேரியபிள் அலோவென்ஸ் வழங்கப்பட்டது.

Also Read

ஆனால் குறிப்பிட்ட ஊழியர்களுக்கு இந்த வேரியபிள் அலோவென்ஸை பாதியாக குறைத்து 50% மட்டுமே வழங்கப்பட்டதாக மணி கண்ட்ரோல் செய்தி கூறுகிறது. அதாவது டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்கள் அலுவலகத்தில் வந்து வேலை செய்ய வேண்டிய நாட்கள் என ஒரு குறிப்பிட்ட வரம்பினை நிர்ணயம் செய்துள்ளது. இந்த குறிப்பிட்ட நாட்கள் அலுவலகம் வந்து வேலை செய்யாத ஊழியர்களுக்கு, இந்த வேரியபிள் அலோவென்ஸை பாதியாக குறைத்து இருக்கிறதாம்.

Recommended For You

இதனால் ஊழியர்கள் புலம்பி வருகின்றனர், வீட்டில் இருந்து வேலை செய்தாலும் டிசிஎஸ் நிறுவனத்திற்காக தானே வேலை செய்கிறோம் அப்படி இருந்தும் அலோவென்ஸை ஏன் குறைக்கிறார்கள் என வினவுகின்றனர். டிசிஎஸ் பொருத்தவரை அலுவலகத்திற்கு வந்து வேலை செய்வதை மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. டிசிஎஸ் ஊழியர்கள் தங்களுடைய வேலை நாட்களில் 85 சதவீதம் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்திருக்க வேண்டும் அப்போதுதான் அவர்களுக்கு முழுமையான குவாட்டர்லி வேரியபிள் அலோவென்ஸ் என்பது கிடைக்கும்.

அலோவென்ஸை குறைக்கும் போது ஊழியர்கள் தானாகவே அலுவலகம் வந்து வேலை செய்வார்கள் என்பதற்காகவே டிசிஎஸ் நிறுவனம் இப்படி மறைமுக அழுத்தம் கொடுக்கிறது. ஏற்கனவே பணிநீக்கம், ஏஐ வருகை என இந்திய ஐடி ஊழியர்கள் பல பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த சூழலில் வேரியர்பிள் பேவையும் குறைப்பது ஊழியர்களுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+