போனஸ் தொகை குறைப்பு.. AI வெறியாட்டம் டிசிஎஸ் நிறுவனத்தையும் விட்டு வைக்கவில்லை..!

இந்தியாவில் சந்தை மதிப்பிலும், ஊழியர்கள் எண்ணிக்கையிலும் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ், போன்ஸ் தொடர்பாக மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு ஒட்டுமொத்த ஊழியர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றால் மிகையில்லை.

டாடா குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகத்தில் தொடர்ந்து பிரச்சனை வெடித்து வரும் வேளையில், இந்த மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் தங்க முட்டையிடும் நிறுவனமாக விளங்கும் டிசிஎஸ் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக பல்வேறு வர்த்தக நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது.

போனஸ் தொகை குறைப்பு.. AI வெறியாட்டம் டிசிஎஸ் நிறுவனத்தையும் விட்டு வைக்கவில்லை..!

இதன் வாயிலாக லாப அளவுகளை சமாளிக்கும் நேக்குடன் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் போனஸ் தொகையை குறைந்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலான ஐடி சேவை நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அளிக்கும் போனஸ் தொகையை அதிகளவில் குறைத்தும், காலம் தாழ்த்தியும் கொடுத்து வந்த நிலையில் டிசிஎஸ் மட்டுமே நிலையாக போனஸ் கொடுத்து வந்தது. ஆனால் தற்போது மற்ற நிறுவனங்களின் வருவாய், லாப நெருக்கடி டிசிஎஸ் நிறுவனத்தையும் பாதிக்க துவங்கியுள்ளது.

2027ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான போனஸ் தொகையை டிசிஎஸ் அறிவித்துள்ளது, கடந்த ஆண்டு 80 சதவீதம் வரையிலான போனஸ் தொகையை கொடுத்த டிசிஎஸ் தற்போது 60-70 சதவீதம் மட்டுமே கொடுத்துள்ளது.

இந்நிறுவனத்தில் இருக்கும் மிட் லெவல் ஊழியர்கள் முதல் சீனியர் லெவல் ஊழியர்கள் வரையில் அனைவருக்கும் போன்ஸ் தொகை குறைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியாகியுள்ளது. பல மூத்த நிலை ஊழியர்கள் நாங்கள் 100 சதவீதம் போனஸ் தொகை வாங்கி கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஆகியுள்ளது என புலம்பி வருகின்றனர்.

இதேவேளையில் ஜூனியர் லெவல் ஊழியர்கள் அனைவரும் வழக்கம் போல் 100 சதவீத போனஸ் தொகையை டிசிஎஸ் கொடுத்துள்ளது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. இந்த வார துவக்கத்தில் இன்போசிஸ் நிறுவனமும் தனது ஊழியர்களுக்கான போனஸ் தொகையை அறிவித்திருந்தது.

இதில் ஜூன் காலாண்டுக்கான சராசரி போனஸ் தொகை 70 சதவீதமாக உள்ளது, இது மார்ச் காலாண்டை போலவே இருந்தாலும், கடந்த ஆண்டின் ஜூன் காலாண்டில் கொடுக்கப்பட்ட 80 சதவீத போனஸ் தொகையை ஒப்பிடுகையில் சுமார் 10 சதவீதம் குறைவாகும்.

இப்படி அனைத்து நிறுவனங்களும் போன்ஸ் தொகையை குறைத்து வருவது ஐடி ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக ஐடி ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை போனஸ் தொகையாக கொடுக்கும்.

இந்த பிரிவு தொகையை நான்காக பிரித்து ஒவ்வொரு காலாண்டுக்கும் அந்த ஊழியரின் செயல் திறன் அடிப்படையில் போனஸ் தொகையாக அறிவிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+