இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), தனது பங்குதாரர்களை மனங்குளிரும் வகையில் டிசம்பர் காலாண்டு முடிவின் போது அதிரடியான ஈவுத்தொகையை அறிவித்துள்ளது.
டிசிஎஸ் நிர்வாகம் இன்று வெளியிட்ட காலாண்டு முடிவில் இந்நிறுவனப் பங்குகளை வைத்திருக்கும் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் ஒரு பங்கிற்கு ரூ.10 இடைக்கால ஈவுத்தொகை மற்றும் ரூ.66 சிறப்பு ஈவுத்தொகை என மொத்தம் 76 ரூபாயை ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது.

இந்த ஈவுத்தொகையைப் பெற ஜனவரி 17 ஆம் தேதி ரெக்கார்ட் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அந்த தேதியில் டிசிஎஸ் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்கள் இந்த ஈவுத்தொகை பெறத் தகுதியுடையவர்களாக இருப்பார்கள். ஈவுத்தொகை பிப்ரவரி 3 ஆம் தேதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஈவுத்தொகை அறிவிப்பைத் தாண்டி, 2025 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (Q3FY25) டிசிஎஸ் இயக்க லாப விகிதம் 24.5% ஆக இருந்தது, இது வருடாந்திர அடிப்படையில் 50 அடிப்படை புள்ளிகள் குறைவாகும். இருப்பினும், காலாண்டு அடிப்படையில் இதன் அளவு 40 அடிப்படை புள்ளிகள் அதிகமாகும்.
இதேபோல் டிசிஎஸ்-ன் நிகர லாப விகிதம் அதாவது நெட் மார்ஜின் அளவு 19.4% ஆக உள்ளது. மேலும் இக்காலாண்டின் முடிவில் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ரொக்க இருப்பு ரூ.13,032 கோடி ஆக உள்ளது.
இந்த காலாண்டில், டிசிஎஸ் நிறுவனம் கடந்த ஆண்டின் இதே காலாண்டை ஒப்பிடுகையில் 12% அதிகரித்து ரூ.12,380 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனம் ரூ.11,058 கோடி நிகர லாபத்தை மட்டுமே ஈட்டியிருந்தது.
இத்துடன், டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாயும் கடந்த ஆண்டை விட 5.6% அதிகரித்து ரூ.63,973 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.60,583 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சந்தையில் நிலவிய கலவையான கணிப்புகள் மத்தியில் பன்னாட்டு நிறுவனங்களும் அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்த காரணத்தால் பங்குச் சந்தையில் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்று 1.72 சதவீதம் சரிந்து 4036.65 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications