நடக்குமா நடக்காதா.. டிசிஎஸ் நிறுவனத்தில் ஆஃபர் லெட்டர் பெற்ற ஊழியர்கள் அதிருப்தி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் மிகப்பெரிய ஐடி நிறுவனங்கள் கூட தங்களது ஆன்போர்டிங்கினை எட்டு மாதங்கள் வரை தாமதப்படுத்தி வருகின்றன.

டிசிஎஸ் உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் ஆன்போடிங்கினை தொடர்ந்து எட்டு மாதங்களுக்கு மேலாக தாமதப்படுத்தி வருகின்றன.

இது பிரெஷ்ஷர்கள் மற்றும் டிசிஎஸ் நிறுவனத்தின் மூலம் தேர்தெடுக்கப்பட்ட ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.

ஐடி நிறுவனங்களின் பணி நீக்கம்.. 20 நிறுவனங்களின் கசப்பான முடிவு.. இனி தொடரலாம்..!ஐடி நிறுவனங்களின் பணி நீக்கம்.. 20 நிறுவனங்களின் கசப்பான முடிவு.. இனி தொடரலாம்..!

ஊழியர்கள் கவலை

ஊழியர்கள் கவலை

இது குறித்து ஊழியர்கள் டிசிஎஸ் நிறுவனத்தினை குற்றம் சாட்டி வருகின்றனர். ஒரு ஊழியர் புதிய ஆட்சேர்ப்பு டிசிஎஸ் நிறுவனத்திடம் இருந்து உதவி சிஸ்டம் இன்ஜினியர் டிரெய்னி பதவிக்கான ஆஃபர் லெட்டரை பெற்றுள்ளேன். ஆனால் ஏறக்குறைய எட்டு மாதங்களுக்கு பிறகு இன்னும் காத்துக் கொண்டுள்ளேன். என் எதிர்காலத்துடன் விளையாடுகின்றனர். இதனால் நான் மட்டும் பாதிக்கப்படவில்லை. இதேபோல் என்னை போன்ற ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டிசிஎஸ் தான் வேண்டும்

டிசிஎஸ் தான் வேண்டும்

இவ்வாறு பாதிக்கப்பட்ட பல ஊழியர்களில் சிலருக்கு டிசிஎஸ் தவிர, இன்னும் சில நிறுவனங்களில் ஆஃபர் லெட்டர் இருந்தும் அவர்கள் டிசிஎஸ் நிறுவனத்தையே எதிர்பார்ப்பதாகவும், நிறுவனத்தின் அறிவிப்புக்காக காத்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

6 மாதங்களாக காத்திருப்பு

6 மாதங்களாக காத்திருப்பு

இதுபோன்ற சில நிறுவனங்களிடம் இருந்து ஆஃபர் லெட்டரை பெற்ற ஊழியர் ஒருவர், அமேசான் நிறுவனத்திடம் இருந்து தனக்கு ஆஃபர் கிடைத்துள்ளதாகவும், எனினும் அவர் டிசிஎஸ்-ல் பணிபுரிவதையே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் 6 மாதங்களாக தனக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.

தேவைக்கு ஏற்ப கூப்பிடுவோம்

தேவைக்கு ஏற்ப கூப்பிடுவோம்

நிறுவனம் வணிகத் தேவைகளுக்கு ஏற்ப நிறுவனம் தேதிகள் வழங்கப்படும் என்று கூறுகின்றது. தேவைகளுக்கு ஏற்ப உங்களுக்கு மீண்டும் சேரும் கடிதம் வழங்கப்படும் என்றும், நாங்கள் உங்கள் பொறுமையை பாராட்டுகிறோம் என்றும் தெரிவித்துள்ளது. நீங்கள் டிசிஎஸ்-க்காக காத்திருப்பதை நாங்கள் பாராட்டுகிறோம். எங்களை புரிந்து கொண்டதற்காக நன்றி என்றும் தெரிவித்துள்ளது.

மீண்டும் கேம்பஸ்

மீண்டும் கேம்பஸ்

இதற்கிடையில் மற்றொரு குற்றச்சாட்டில், தேர்தெடுக்கப்பட்ட ஊழியர்கள், நிறுவனம் முந்தைய ஆண்டு இண்டர்வியூ மூலம் தேர்வு செய்தவர்களை விடுத்து, தற்போது மீண்டும் கல்லூரிகளில் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் ஆள் எடுத்துக் கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளனர். எங்களில் பலர் நிறுவனத்தின் அழைப்புக்காக பல மாதங்களாக காத்துக் கொண்டுள்ளோம்.

தேவையில்லாமலா ஆள் எடுக்கிறீர்கள்?

தேவையில்லாமலா ஆள் எடுக்கிறீர்கள்?

ஆனால் நிறுவனம் எங்களது கல்லூரி மற்றும் பல கல்லூரிகளில் இருந்து பணியமர்த்திக் கொண்டுள்ளது என்றும் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

நிறுவனத்தில் வேலையே இல்லை. வேலை இருந்தால் நாங்கள் உங்களை அழைப்போம் என கூறுகின்றனர். ஆனால் எதற்காக அங்கு பணியமர்த்தலை தொடர்ந்து செய்கின்றனர் என்ற கேள்வியையும் ஊழியர்கள் எழுப்பி வருகின்றனர்.

மற்ற நிறுவனங்களின் நிலை

மற்ற நிறுவனங்களின் நிலை

முன்னதாக ஒரு அறிக்கையில் இன்ஃபோசிஸ், விப்ரோ , டெக் மஹிந்திரா, கேப்ஜெமினி, அசெஞ்சர், எம்பஸிஸ், மைண்ட் ட்ரீ, டெலாய்ட் மற்றும் ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களது பணியமர்த்தலை தாமதப்படுத்தி வருகின்றன. மேற்கண்ட நிறுவனங்களும் தங்களது வணிக தேவைக்கு ஏற்ப தாமதப்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளன.

ஆர்டர் கேன்சல்

ஆர்டர் கேன்சல்

விப்ரோ மற்றும் டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் அழைப்பினை திரும்ப பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் டிசிஎஸ் நிறுவனம் தங்களை அழைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகின்றது.

எப்போது நடக்கும்?

எப்போது நடக்கும்?


இணைப்புக்காக காத்திருக்கும் ஊழியர்களில் ஒருவர் எங்களுக்கு ஒரு சரியான முடிவு தேதி என்பது வேண்டும். நாங்கள் அந்த தேதிகளில் இணைந்து கொள்கிறோம். அதனைத் தான் நாங்கள் கேட்கிறோம்.

டிசிஎஸ் தரப்பில் கூறுகையில், டிசிஎஸ் அதன் ஆஃபர் லெட்டரை மதிக்கும். நிறுவனம் கூறியது போன்று நடக்கும் என்றும் தெரிவித்துள்ளது. எனினும் இது எப்போது நடக்கும் என்பதே பிரெஷ்ஷர்கள் மற்றும் ஆஃபர் லெட்டரை பெற்றுக் கொண்டு காத்திருப்பவர்களின் கேள்வியாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: tcs டிசிஎஸ்
English summary

TCS delays onboarding: Many freshers are dissatisfied

IT companies including TCS have been delaying onboarding for more than eight months. This has caused great dissatisfaction among the freshers.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X