இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) குறித்து கடந்த 2 நாட்களுக்காக ஐடி ஊழியர்களை அலுவலகத்திற்கு வர சொல்லி நெருக்கடி கொடுப்பதாகவும், அலுவலகத்திற்கு வராத ஊழியர்களின் கரியர் அல்லது சம்பளத்தில் கை வைப்பதாகவும், மெமோ கொடுப்பதாகவும் தகவல் வெளியானது.
கொரோனா தொற்றின் ஆரம்பக் காலத்தில் முதல் நிறுவனமாக ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் அறிவித்தது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) தான், இதேபோல் கொரோனா தொற்று முடிந்த பின்பு ஊழியர்களை அதிகளவில் அலுவலகத்திற்கு அழைத்ததும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) தான்.

இப்படியிருக்கும் சூழ்நிலையில் தான் மார்ச் காலாண்டு முடிவுகளுக்கு பின்பு அனைத்து முன்னணி ஐடி நிறுவனங்களும் ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்க முடிவு செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இந்த நேரத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை மாதத்தில் 12 நாள் அலுவலகத்திற்கு வராத ஊழியர்களுக்கு டிசிஎஸ் நிர்வாகம் மெமோ அனுப்பி வருவதாக செய்தி வெளியிட்டது, இதை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிர்வாகம் இன்று வெளியிட்ட அறிவிப்பு மூலம் மொத்தமாக மறுத்துள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தும், டிசிஎஸ் நிர்வாகம் ஊழியர்களை வாரத்தில் 3 நாள் அலுவலகத்திற்கு வர சொல்லி ஊக்குவித்து வருகிறது, ஆனால் இதற்கும் கரியர் அல்லது சம்பளத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தியுள்ளதாக ஊழியர்களிடம் கூறவுமில்லை, இதை செய்யவும் இல்லை என தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, ஊழியர்கள் மீண்டும் சிறப்பான அலுவலக கலாச்சாரத்தை கொண்டாட துவங்கியுள்ளனர். குறிப்பாக கடந்த 2 வருடத்தில் டிசிஎஸ் நிறுவனத்தில் சேர்ந்தவர்கள் அலுவலகத்திற்கு வருவதன் மூலம் கற்றுக்கொள்ளவும், வளரவும் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் என்டிடிவிக்கு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications