இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), அதன் மூத்த ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக மூன்றாவது காலாண்டிலும் வேரியபிள் பே குறைப்பை எதிர்கொண்டுள்ளதாக வெளியான ஊடக அறிக்கைகளை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
குட்ரிட்டர்ன்ஸ் அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதிலளித்த டிசிஎஸ், நிறுவனத்தின் 70 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு 100 சதவீத காலாண்டு வேரியபிள் பே (Quarterly Variable Allowance - QVA) வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

டிசிஎஸ் மேலும் கூறுகையில், "நிறுவனத்தின் 70 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு நாங்கள் 100% காலாண்டு அடிப்படையாலான வேரியபிள் பே வழங்கியுள்ளோம். மற்ற அனைத்து தரநிலை ஊழியர்களுக்கும், அவர்களின் வணிகப் பிரிவின் செயல்பாட்டைப் பொறுத்தது இந்த காலாண்டு வேரியபிள் பே கொடுக்கப்பட்டு உள்ளது." என்று விளக்கமளித்தது. இதன் மூலம் வேரியபிள் பே குறைப்பு குறித்த செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்பதை டிசிஎஸ் தெளிவுபடுத்தியுள்ளது.
இருப்பினும், ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் ஊடகத்தின் முந்தைய அறிக்கையின்படி, டிசிஎஸ் நிறுவனத்தின் மூத்த ஊழியர்கள் டிசம்பர் காலாண்டில் 30 சதவீத வேரியபிள் பே குறைப்பை எதிர்கொண்டதாகக் கூறப்பட்டது. அதற்கு முன்னதாக, 2024-25 நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் அவர்கள் 20 முதல் 30 சதவீதம் வரை வேரியபிள் பே குறைப்பை எதிர்கொண்டதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது. இந்த முந்தைய அறிக்கைகளுக்கும் டிசிஎஸ் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டிசிஎஸ்ஸின் இந்த மறுப்பு, ஊதியக் குறைப்பு குறித்த ஊழியர்கள் மத்தியில் நிலவிய குழப்பத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இந்நிறுவனத்தின் பெரும்பான்மையான ஊழியர்களுக்கு முழு வேரியபிள் பே ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக டிசிஎஸ் உறுதியளித்துள்ளது.
அதே நேரத்தில், ஒரு சில பிரிவுகளின் ஊதியம் வணிகப் பிரிவின் செயல்பாட்டைப் பொறுத்து மாறுபடும் என்ற நிறுவனத்தின் வழக்கமான நடைமுறையையும் செயல்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications