இந்தியாவின் மகிப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் இந்த ஆண்டுக்கான கேம்பஸ் இண்டர்வியூவ் பணிகளைப் பிற முன்னணி நிறுவனங்களைக் காட்டிலும் முன்னதாகவே துவங்கி விட்டத்து. சுமார் 6 லட்சம் ஊழியர்களைக் கொண்டு இருக்கும் டிசிஎஸ் நிறுவனத்தில் டிகிரி முடிச்ச கையோடு 11 லட்சம் சம்பளம் பெற முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்..?
TCS நிறுவனம் பட்டம் பெற்று கல்லூரியை விட்டு வெளியேறும் பட்டதாரிகள் அதாவது fresher-களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மார்ச் 29 ஆம் தேதி வெளியிட்டது. இது நாட்டின் இளம் பொறியியல் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் மூன்று பிரிவுகளில் பிரஷ்ஷர்களை பணியில் அமர்த்தி வருகிறது. நிஞ்ஜா (Ninja), டிஜிட்டல் (Digital) மற்றும் பிரைம் (Prime) ஆகிய 3 பிரிவில் ஒவ்வொரு வருடமும் கல்லூரியை விட்டு வெளியேறும் பட்டதாரிகளைத் தேர்வு செய்து வருகிறது.
இந்த 3 பிரிவுக்கும் இருக்கும் முக்கியமான வித்தியாசம் சம்பம் தான், நிஞ்ஜா பிரிவில் தேர்வாகும் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.3.36 லட்சம் ஊதியம் வழங்குகிறது, அதே நேரத்தில் டிஜிட்டல் மற்றும் பிரைம் பிரிவுகள் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் மற்றும் ரூ.9-11.5 லட்சம் ஊதியம் வழங்குகின்றன.
டிசிஎஸ் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு முடிவுகள் படி, தொடர்ச்சியாக இரண்டாவது காலாண்டாக மொத்த ஊழியர் எண்ணிக்கை குறைந்துள்ளது. மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் ஊழியர் எண்ணிக்கை 5,680 குறைந்து மொத்தமாக 6,03,305 ஆக இருந்தது.
இதேவேளையில் பணியாளர் வெளியேற்ற விகிதம் எனப்படும் attrition rate 13.3 சதவீதமாகக் குறைந்துள்ளது, டிசிஎஸ் நிர்வாகத்திற்குச் சாதகமாக இருந்தது. இதேபோல் இந்த மார்ச் காலாண்டு முடிவுகள் அடுத்த சில நாட்களில் வெளியாக உள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் 2024 ஆம் ஆண்டு பி.டெக், பி.இ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி மற்றும் எம்.எஸ் படிப்பு முடித்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஏப்ரல் 10 ஆம் தேதி, NQT தேர்வு ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது என நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளைப் பொறுத்து மூன்று பிரிவுகளில் ஒன்றில் பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் கல்விப் படிப்பின் முழு காலகட்டத்திலும் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் அல்லது 6 CGPA பெற்றிருக்க வேண்டும். எந்த பாடத்திலும் தேர்ச்சி பெறாத நிலை (Backlogs) இருக்கக் கூடாது, மேலும் படிப்பை நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்திற்குள் முடித்திருக்க வேண்டும்.
அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்கலாம், 18 முதல் 28 வயது வரையிலான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். இரண்டு வருட இடைவெளி உள்ள விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்கலாம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications