டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் இன்று 2024 ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. சந்தை கணிப்புகளை தாண்டி லாபம் மற்றும் வருவாய் அளவுகளை வெளியிட்டது மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக ஒரு பங்கிற்கு 9 ரூபாய் ஈவுத்தொகையும், 17000 கோடி ரூபாய் மதிப்பிலான பைபேக் திட்டத்தையும் அறிவித்துள்ளது.
ஆனால் ஐடி ஊழியர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஏற்கனவே பெரிய ஐடி சேவை நிறுவனங்களில் பிரஷ்ஷர்கள் மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் மந்தமாக இருக்கும் வேளையில் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறது

செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த
பணியாளர்கள் எண்ணிக்கையில் 6,333 ஊழியர்கள் குறைந்து தற்போது 608,985 ஆக உள்ளது. ஆனால் 6 லட்சம் என்ற அளவீட்டை இழக்கவில்லை என்பது மகிழ்ச்சியான விஷயமாக உள்ளது.
கடந்த ஆண்டின் இதே செப்டம்பர காலாண்டில் டிசிஎஸ் ஊழியர்கள் எண்ணிக்கை சுமார் 7,186 குறைந்தது. இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளர் என்ற பெருமை கொண்டு இருக்கும் டிசிஎஸ் 2024 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் வெறும் 523 பணியாளர்களை மட்டுமே கூடுதலாக சேர்த்துள்ள நிலையில் 2வது காலாண்டில் 6,333 பணியாளர்கள் குறைந்துள்ளது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
மேக்ரோ பொருளாதார பிரச்சனைகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் தொழில்நுட்ப செலவுகளை குறைத்ததன் காரணமாக இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் மந்தமான வளர்ச்சியை எதிர்கொண்டு வருகிறது.
கடந்த மாதம் சர்வதேச அளவில் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் அக்சென்சர் தனது நான்காவது காலாண்டில் வெறும் 951 ஊழியர்கள் மட்டுமே கூடுதலாக சேர்ந்துள்ளதாக தனது காலாண்டு அறிக்கையில் தெரிவித்து இருந்தது.
டிசிஎஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் அளவு செப்டம்பர் காலாண்டில் 14.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த காலாண்டில் 17.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 608,985 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications