சென்னை: டாடா குழுமத்தின் குபேரனாக இருக்கும் ஐடி சேவை பிரிவான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தனது ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. இக்காலாண்டில் சந்தை கணிப்புகளைத் தாண்டி ஏப்ரல்-ஜூன் ரூ.12,040 கோடி அளவிலான லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் 9% அதிகமாகும்.
மேலும் ஜூன் காலாண்டில் டிசிஎஸ் நிர்வாகம் தனது பங்குதாரர்களுக்கு ரூ.10 ஈவுத்தொகை அறிவித்துள்ளது. கடந்த மூன்று காலாண்டுகளாகத் தொடர்ந்து குறைந்து வந்த ஊழியர் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் 5,452 ஊழியர்கள் கூடுதலாக பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், ஜூன் மாத இறுதியில் நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கை 6,06,998 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் டிசிஎஸ் ஊழியர்களின் எண்ணிக்கை 6,01,546 ஆக இருந்தது.
மேலும், டிசிஎஸ்-ன் ஊழியர் வெளியேற்ற விகிதமான அட்ரிஷன் விகிதம் 12.1% ஆக உள்ளது. கடந்த காலாண்டில் இது 12.5% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. டிசிஎஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், ஜூன் காலாண்டில் இது மாறியுள்ளது.
இதை தொடர்ந்து ஜூன் காலாண்டு முடிவில் டிசிஎஸ் தொழில்நுட்ப உரிமைகள் அதாவது நிறுவனத்தின் டெக்னாலஜி பேடென்ட் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது வரை மொத்தம் 8,194 தொழில்நுட்ப உரிமைகளுக்கான விண்ணப்பம் செய்துள்ளது. கடந்த காலாண்டில் மட்டும் 154 விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 4,146 டெக்னாலஜி பேடென்ட் பெறப்பட்டுள்ளன. கடந்த காலாண்டில் மட்டும் 227 டெக்னாலஜி பேடென்ட் வழங்கப்பட்டுள்ளன.
டிசிஎஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை, லாப அளவீடுகள் குறித்த அறிவிப்புகள் ஆகியவற்றைப் பார்க்கும் போது ஐடி சேவைத் துறை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளதாக தெரிகிறது.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?



Click it and Unblock the Notifications