இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக டாடா குழுமத்திற்கு சொந்தமான டிசிஎஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது . டிசிஎஸ் நிறுவனம் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு தந்திருக்கிறது. இந்தியாவில் ஐடி துறையின் லீடர் என டிசிஎஸ் நிறுவனம் அழைக்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் டிசிஎஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களில் இரண்டு சதவீதம் பேரை வேலையிலிருந்து நீக்க போகிறோம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. நடப்பு நிதியாண்டிலேயே இரண்டு சதவீதம் அதாவது 12,000 க்கும் அதிகமான ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என தெரிவித்தது. செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டுக்குள் 6000 பேரை ஏற்கனவே டிசிஎஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்துவிட்டது. மீதமுள்ள 6 ஆயிரம் பேர் அடுத்தடுத்த மாதங்களில் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

மத்திய நிலையில் இருக்கக்கூடிய ஊழியர்கள் தான் இந்த பணி நீக்க நடவடிக்கையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு அதிகபட்ச நிதி இழப்பீடு வழங்கப்படுவதாக டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது .ஆனால் உண்மை நிலவரம் வேறு ஒன்றாக இருக்கிறது என டிசிஎஸ் நிறுவன ஊழியர்கள் கூறுகின்றனர்.
பல்வேறு ஊழியர்களும் ரெடிட் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக டிசிஎஸ் நிறுவனம் தங்களை கட்டாயப்படுத்தி வேலையில் இருந்து ராஜினாமா செய்ய வைப்பதாக தொடர்ந்து புகார் கூறிய வண்ணம் இருக்கின்றனர். ஃபோனில் அழைத்து ராஜினாமா செய்யுமாறு மிரட்டுகிறார்கள் என்றும் , மீட்டிங் என அழைத்து ஐடி கார்டினை வாங்கி வைத்து கொள்கிறார்கள் என்றும் தொடர்ச்சியாக புகார்களை முன் வைத்த வண்ணம் இருக்கின்றனர்.
மத்திய மாநில அரசுகள் டிசிஎஸ் நிறுவனத்தில் இந்த பணிநீக்க நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்திய வண்ணம் இருக்கின்றனர். இத்தகைய சூழலில் தான் ஐடி ஊழியர்களுக்கான கூட்டமைப்பான FITE தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டிருக்கிறது.
டிசிஎஸ் நிறுவனத்தில் 13 ஆண்டுகள் வேலை செய்த ஒரு ஊழியரை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்திருக்கின்றனர், அவருக்கு எந்த ஒரு நிதி இழப்பீடும் அவர்கள் வழங்கவில்லை என அதில் குற்றம் சாட்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி நிறுவனம் சார்பாக அவருக்காக செலுத்தப்பட்ட மருத்துவ காப்பீடு பிரீமியம் தொகையான 60 ஆயிரம் ரூபாயை அவரை தங்களுக்கு திரும்ப செலுத்துமாறு நிறுவனம் கேட்கிறதாம் என்றும் சுட்டிக் காட்டி இருக்கிறது.
டிசிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது ஒன்றாகவும் அதன் செயல்பாடுகள் முற்றிலும் மாறுபட்டதாகவும் இருக்கிறது என அந்த அமைப்பு சாடி இருக்கிறது. இந்த விவகாரத்தில் ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் டிசிஎஸ் நிறுவனத்தின் பணி நீக்க நடவடிக்கைகளை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்காமல் சிறப்பு புலனாய்வு குழுவினை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டிருக்கின்றனர் .
அதில் அந்த ஊழியர் தங்களுக்கு அனுப்பிய வாட்ஸ் அப் பதிவையும் பதிவு செய்திருக்கின்றனர். அதில் நான் மும்பை டிசிஎஸ் அலுவலகத்தில் வேலை செய்கிறேன் 2012 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆம் ஆண்டு வரை இந்த நிறுவனத்திற்காக உழைத்திருக்கிறேன் திடீரென என்னை அழைத்து அரை மணி நேரத்திற்குள் வேலையை ராஜினாமா செய்யுமாறு கூறுகிறார்கள் என அவர் பதிவு செய்திருக்கிறார். இதற்கிடையே ஊழியரின் புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

ஜெமினி, கிளாட்-க்கு வேட்டு..!! OpenAI நிறுவனத்தில் உருவாகிய புதிய பதவி..! இனி இதற்கு தான் எதிர்காலம்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications