டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் இன்று டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிலையில் லாபம், வருவாய் தரவுகள் உடன் தனது ஊழியர் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் புட்டு புட்டு வைத்துள்ளது. இந்திய ஐடி சேவை துறையில் பல காலாண்டுகளாக ஊழியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் போக்கு இருந்தது. ஆனால் கடந்த காலாண்டில் இது மாறிய நிலையில் மீண்டும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி, டிசிஎஸ் நிறுவனத்தில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 607,354 ஆக இருந்துள்ளது. இது முந்தைய காலாண்டில் பதிவு செய்யப்பட்ட 612,724 ஊழியர்களை விட குறைவானது. இந்த 3 மாத காலகட்டத்தில் 5,370 ஊழியர்கள் குறைந்துள்ளனர்.

ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ள வேளையில், டிசிஎஸ் நிர்வாகம் ஊழியர்களைத் தக்க வைக்கப் பதவி உயர்வுகளை அதிகளவில் கொடுத்துள்ளது. இதுகுறித்து டிசிஎஸ்-ன் தலைமை மனிதவள அதிகாரி மிலிந்த் லக்காட் முக்கியமான தகவல்களைக் கொடுத்துள்ளார்.
மிலிந்த் லக்காட் கூறுகையில் 2024 ஆம் ஆண்டு அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் சுமார் 25,000 ஊழியர்கள் பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மொத்தம் 1,10,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர் என்று பெருமையுடன் கூறியுள்ளார்.
டிசிஎஸ்-ன் மொத்த ஊழியர்களில் 35.3% பெண்களாக உள்ளனர். இந்நிறுவனத்தில் தற்போது 152 நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். டிசம்பர் காலாண்டில் ஊழியர் எண்ணிக்கையில் லேசான வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும், டிசிஎஸ் ஊழியர் வெளியேற்றத்தைக் குறைக்க 1 லட்சம் பேருக்கு பதவி உயர்வு கொடுத்துள்ளது.
கடந்த பன்னிரண்டு மாதங்களில் டிசிஎஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 13% ஆக உள்ளது. Q3FY25 க்கான மொத்த ஊழியர் செலவு ரூ.35,956 கோடியாக இருக்கிறது.
டிசிஎஸ்-ன் நிகர லாப விகிதம் அதாவது நெட் மார்ஜின் அளவு 19.4% ஆக உள்ளது. மேலும் இக்காலாண்டின் முடிவில் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ரொக்க இருப்பு ரூ.13,032 கோடி ஆக உள்ளது.
இந்த காலாண்டில், டிசிஎஸ் நிறுவனம் கடந்த ஆண்டின் இதே காலாண்டை ஒப்பிடுகையில் 12% அதிகரித்து ரூ.12,380 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனம் ரூ.11,058 கோடி நிகர லாபத்தை மட்டுமே ஈட்டியிருந்தது.
இத்துடன், டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாயும் கடந்த ஆண்டை விட 5.6% அதிகரித்து ரூ.63,973 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.60,583 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications