டாடா குழுமத்துக்கு சொந்தமான டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களை முறையாக நடத்துவதில்லை என தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. டிசிஎஸ் நிறுவனம் பல்வேறு ஊழியர்களையும் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கிறது , ஊழியர்களை மோசமாக நடத்துகிறது என ரெட்டிட் உள்ளிட்ட தளங்களில் முன்னாள் இன்னாள் டிசிஎஸ் ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தற்போது தீபாவளி பண்டிகைகுக்கு இன்னும் நான்கு தினங்களே இருக்கக்கூடிய சூழலில் டிசிஎஸி நிறுவனம் ஊழியர்களுக்கு விடுப்பு தரவில்லை என ஒரு புகார் எழுந்து இருக்கிறது. ரெடிட் பக்கத்தில் Work place toxicity என்ற பெயரில் ஒரு பதிவினை டிசிஎஸ் ஊழியர் ஒருவர் வெளியிட்டு இருக்கிறார். அதில் டிசிஎஸ் நிறுவனத்தில் தீபாவளி வாரத்தில் லீவு இல்லை என தலைப்பிட்டு பதிவு செய்திருக்கிறார் .

டிசிஎஸ் நிறுவனத்தின் மேலாண்மை மிக மோசமாகிவிட்டது என கூறியிருக்கும் அவர் என்னுடைய மேலாளர் எங்களுடைய குழுவில் இனி யாருக்கும் தீபாவளி விடுப்புக்கு ஒப்புதல் கிடைக்காது என பதிவு செய்திருப்பதாக கூறி இருக்கிறார். தீபாவளி இந்தியாவில் முக்கியமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை அதற்கு கூட லீவு இல்லை என்றால் என்ன அர்த்தம் என வினவியுள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகை என வரும் போது அந்த டிசம்பர் மாதம் முழுவதுமே அலுவலகமே கொண்டாட்டத்தில் தான் இருக்கும். அதே போன்ற ஒரு மரியாதை மற்றும் மதிப்பை தான் தீபாவளிக்கும் எதிர்பார்க்கிறோம் என கூறியுள்ளார். ஏன் தீபாவளி விடுப்பு தர மறுக்கிறார்கள் என வினவியுள்ளார். இந்தியாவில் அதிகமானவர்கள் கொண்டாடும் பண்டிகை தீபாவளி ஆனால் அதற்கு லீவு இல்லை என்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
மொத்த ஊழியர்களுமே பண்டிகை கொண்டாட்டத்தில் இருக்கும் போது இவர்களாகவே விடுமுறை அளிக்காமல் ஏன் தவிர்க்கிறார்கள் என கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும் தன்னுடைய மேலாளர் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவரை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது ஆனால் டீமில் யாரேனும் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவர்களை திரும்பத் திரும்ப அனைத்து தொல்லை செய்கிறார் என கூறியிருக்கிறார்.
அவருடைய இந்த பதிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். தீபாவளிக்கு முன்கூட்டியே லீவு வேண்டும் என நீங்கள் தானே விண்ணப்பித்திருக்க வேண்டும் கடைசி நேரம் வரை காத்திருந்து திடீரென லீவு தரவில்லை என கூறுவது சரியில்லை என ஒரு நபர் கூறியுள்ளார்.ஒரு பயனர் தீபாவளி என்றால் அனைவருமே கொண்டாட்டத்தில் இருப்பார்கள் தேசிய விடுமுறை நாள் அப்போது நிறுவனம் தானாகவே அனைவருக்கும் விடுப்பு வழங்க வேண்டும் இல்லை என கூறுவது நியாயமில்லை என கூறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications