இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் தனது சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டது, சந்தை கணிப்புகளுக்கு பூர்த்தி செய்யாவிட்டாலும் கடந்த ஆண்டை காட்டிலும் சிறப்பான நிதி நிலை அறிக்கையை டிசிஎஸ் வெளியிட்டு உள்ளது.
இந்த நிலையில் டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அளவீடுகள் குறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனித வள பிரிவு அதிகாரியான மிலிந்த் லக்காட் முக்கியமான அப்டேட்-ஐ கொடுத்துள்ளார். ஒருப்பக்கம் அக்சென்சர் 19000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதை வேகப்படுத்தியிருக்கும் வேளையில், இந்திய ஐடி நிறுவனங்கள் பணிநீக்கம் இருக்காது என்பதை உறுதியாக சொல்ல முடியாமல் தவிக்கிறது.

இதற்கு முக்கியமான காரணம் இந்தியாவின் டாப் 5 ஐடி நிறுவனங்கள் அனைத்தும் அதிகப்படியான வர்த்தகத்தையும் வருவாயும் BFSI பிரிவில் வைத்துள்ளது. இது மட்டும் அல்லாமல் 60 - 80 சதவீத வர்த்தகத்தை அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் வைத்துள்ளது. தற்போது இரண்டுமே பாதிப்பில் இருக்கும் காரணத்தால் இந்திய ஐடி நிறுவனங்களின் நிலை என்ன என்பது பெரும் கேள்வியாகவே உள்ளது.
இந்த குழுப்பத்திற்கு மத்தியில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 2023 ஆம் நிதியாண்டை போலவே 2024 ஆம் ஆண்டும் சம்பள உயர்வை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அக்சென்ஞர் பணிநீக்க அச்சத்திற்கு மத்தியில் இது பெரிய விஷயமாக உள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனித வள பிரிவு அதிகாரியான மிலிந்த் லக்காட் கூறுகையில் இந்த வருடம் சிறப்பாக பணியாற்றுவோர் தொடர்ந்து 12 - 15 சதவீதம் வரையிலான சம்பள உயர்வை பெறுவார்கள், மற்ற பிரிவில் இருக்கும் ஊழியர்கள் அனைவரும் 1.5 முதல் 8 சதவீதம் வரையிலான சம்பள உயர்வு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இது மட்டும் அல்லாமல் டிசிஎஸ் ஊழியர்கள் கடந்த காலாண்டுக்கான வேரியபிள் பே தொகையை முழுமையாக அதாவது 100 சதவீத வேரியபிள் பே தொகையை பெற வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்தார் மிலிந்த் லக்காட். இந்த அறிவிப்புகள் கட்டாயம் பிற ஐடி நிறுவனங்கள் மத்தியிலும் எதிரொலிக்கும் என்பதால் டிசிஎஸ் அறிவிப்பு ஒட்டுமொத்த ஐடி ஊழியர்களுக்கும் ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.

மார்ச் காலாண்டு முடிவில் டிசிஎஸ் நிறுவனத்தின் உலகளாவிய ஊழியர்கள் எண்ணிக்கை 6,14,795 ஆக உயர்ந்துள்ளது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் டிசம்பர் காலாண்டில் எப்போதும் இல்லாத வகையில் டிசிஎஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் எண்ணிக்கை 2,197 குறைந்தது. ஆனாலும் மார்ச் காலாண்டில் முந்தைய எண்ணிக்கையை காட்டிலும் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 821 அதிகரித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 2022 ஆம் நிதியாண்டில் 1.3 லட்சம் ஊழியர்களை புதிதாக சேர்ந்த நிலையில், 2023 ஆம் நிதியாண்டில் வெறும் 22,600 ஊழியர்களை மட்டுமே டிசிஎஸ் சேர்த்துள்ளது. இது மிகப்பெரிய சரிவாகும்.


Click it and Unblock the Notifications