இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் புதிய வர்த்தகத்தை பெறுவதில் பிற நிறுவனங்களை போலவே கடுமையான சவால்களை எதிர்கொண்டு இருக்கும் வேளையில், தற்போது இருக்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகப்படியான சேவைகளை கொடுத்து கூடுதல் வருமானத்தை பெறும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதேபோல் அடுத்த 6 மாதத்திற்கு சர்வதேச நிறுவனங்கள் ஐடி செலவுகளை பெரிய அளவில் செய்யாது எனவும் கணித்துள்ளது.
இப்படியிருக்கும் வேளையில் கே கிருதிவாசன் தலைமையிலான டிசிஎஸ் நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு அளித்த வொர்க் ப்ரம் ஹோம் சலுகை மற்றும் ஹைப்ரிட் மாடல் ஆகிய அனைத்தையும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நீக்க உள்ளதாக ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது.

டிசிஎஸ் நிறுவனம் தான் முதன் முதலில் வொர்க் ப்ரம் ஹோம் சேவையை கொண்டு வந்தது, கொரோனா தொற்று குறைந்த பின்பு முதல் முதலாக ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்தது. இதை தொடர்ந்து தற்போது அனைத்து ஊழியர்களையும் வாரத்தில் 5 நாட்களும் அலுவலகத்திற்கு அழைக்கும் முடிவை எடுத்துள்ளது.
இதன் மூலம் டிசிஎஸ் நிறுவனம் வொர்க் ப்ரம் ஹோம் பாலிசி மொத்தமாக முடிவுக்கு வந்துள்ளது, டிசிஎஸ் அறிவிப்பால் பிற முன்னணி சேவை நிறுவனங்களும் இந்த முடிவை எடுக்க வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது. அடுத்த சில வாரத்தில் விப்ரோ, இன்போசிஸ், ஹெச்சிஎல், டெக் மஹிந்திராவும் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசிஎஸ் நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய ஈமெயிலில் சிஇஓ மற்றும் CHRO அதிகாரி கூறியபடி அக்டோபர் 1, 2023 முதல் அனைத்து அசோசியேட் ஊழியர்களும் வாரத்தில் 5 நாளும் அலுவலகம் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தில் பல மேனேஜர்கள் தனது அணி ஊழியர்களை வாரத்தில் 5 நாட்களும் அலுவலகம் அழைத்துள்ளனர். பல மாதங்களாக மேனேஜர்களுக்கு மேல் உள்ள அனைத்து ஊழியர்களும் 5 நாளும் அலுவலகம் வருகின்றனர். இப்படியிருக்கையில் அனைத்து ஐடி ஊழியர்களும் தங்கள் நிறுவனம் வாரத்தில் 5 நாள் அலுவலகத்திற்கு வர வைக்குமா என்ற அச்சத்தில் உள்ளனர்.
சரி டிசிஎஸ் அறிவிப்புக்கும், பெங்களூர் மக்களுக்கும் என்ன தொடர்பு..? கடந்த வாரம் புதன்கிழமை பெங்களூர் அவுட்டர் ரிங் ரோட்டில் மாலை திடிரென கடும் டிராபிக் ஜாம் ஆனது இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவதால் செவ்வாய்க்கிழமை பெங்களூரில் பந்த் இருந்த காரணத்தால் அனைத்து ஊழியர்களும் வாரத்தில் 3 நாள் வர வேண்டிய கட்டாயத்தால் புதன்கிழமை அலுவலகம் வந்தனர்.
இதனால் பெங்களூர் சாலையில் எதிர்பாராத விதமாக டிராபிக் ஜாம் ஆனாது. இதேவேளையில் அவுட்டர் ரிங் ரோட்டில் எவ்விதமான விபத்துகளும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் 4 கார்கள், 2 கன ரக வாகனங்கள் பிரேக் டவுன் ஆனது. மேலும் 5 நாள் தொடர் விடுமுறை என்பதால் அதிகப்படியான மக்கள் பெங்களூர்-ஐ விட்டு வெளியேறியதும் இந்த மோசமான டிராபிக் பிரச்சனைக்கு காரணமாகும்.
மாரத்தஹள்ளி முதல் சில்க் போர்டு வரையில் பொதுவாக புதன்கிழமை 1.5 முதல் 2 லட்சம் வாகனங்கள் வரும், ஆனால் செப்டம்பர் 27 ஆம் தேதி 3.6 லட்சம் வாகனங்கள் வந்தது. இந்த நிலையில் டிசிஎஸ் அறிவிப்பை தொடர்ந்து பிற ஐடி சேவை நிறுவனங்களும் WFH - Hybrid Model-ஐ ரத்து செய்தால் பெங்களூரில் தினமும் மோசமான டிராபிக் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications