டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ-வான ராஜேஷ் கோபிநாதன் பதவி விலகியது பெரும் அதிர்ச்சியை அளித்த நிலையில், இவரை வெளியே அனுப்ப மனமில்லாமல் டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் தொடர்ந்து இவரை டாடா குழுமத்திலேயே பணியாற்ற வைக்க திட்டமிட்டு வருவதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ராஜேஷ் கோபிநாதன் வெளியேற முக்கிய காரணம் டாடா குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகிகள் அடங்கிய கூட்டத்தில் சந்திரசேகரன் டிசிஎஸ் குறித்தும், அதன் வளர்ச்சி குறித்தும் விமர்சனம் செய்த காரணத்தால் இதில் மனமுடைந்த ராஜேஷ் கோபிநாதன் பதவி விலகுவதாக சில தகவல் வெளியானது, ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை.
ராஜேஷ் கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்யும் போதும் தனது சொந்த விருப்பங்களை முயற்சி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் ராஜேஷ் கோபிநாதன் கடந்த வாரம் தனது டிசிஎஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ பதவியை ராஜினாமா செய்திருந்தாலும் செப்டம்பர் மாதம் வரையில் தனது பொறுப்புகளை கிருதிவாசன் ஏற்கவும், நிர்வாக மாற்றத்தை எளிதாக்கவும் ராஜேஷ் டிசிஎஸ் பணியில் இருப்பார்.
ராஜேஷ் கோபிநாதன்
ராஜேஷ் கோபிநாதன் சிஇஓ பதவியை ராஜினாமா செய்தாலும் டிசிஎஸ் நிறுவனத்திற்கு தொடர்ந்து strategic advisory பதவியில் இருக்கவோ அல்லது ஒட்டுமொத்த டாடா குரூப் நிறுவனத்தின் பணிகளில் பணியாற்றுவது குறித்து டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாடா சன்ஸ் சந்திரசேகரன்
தற்போது டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் மற்றும் ராஜேஷ் கோபிநாதன் பேச்சுவார்த்தை என்பது டிசிஎஸ் நிறுவனத்தில் மட்டும் ஆலோசனை உறுப்பினராக இருப்பதா அல்லது டாடா குரூப் அளவில் பணியாற்றுவதா என்பது தான். இதன் மூலம் ராஜேஷ் கோபிநாதன் தொடர்ந்து டாடா குழுமத்தில் பணியாற்றுவது உறுதியாகியுள்ளது.
டாடா டிஜிட்டல்
சமீபத்தில் டாடா குழுமத்தின் முக்கியமான வர்த்தகமான டாடா டிஜிட்டல் வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்பட்டு, பெரிய அளவிலான வளர்ச்சி அடைய முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளது. இந்த நிலையில் ராஜேஷ் கோபிநாதன் அனுபவம் டாடா டிஜிட்டல் போன்ற வர்த்தகத்திற்கு உதவும், மேலும் இப்பிரிவில் இருந்த பல உயர் அதிகாரிகள் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
கே கிருதிவாசன்
கே கிருதிவாசன் வயது அடிப்படையில் பார்க்கும் போது தற்போது இவருடைய வயது 58 இதன் மூலம் இவருடைய 65 வயதில் அதாவது அடுத்த 6-7 வருடத்தில் டிசிஎஸ்-ல் மீண்டும் தலைமை மாற்றத்தை தவிர்க்க முடியாது. இதன் மூலம் நீண்டகால வளர்ச்சி திட்டத்தை வகுப்பதில் பிரச்சனை உருவாகலாம். இதேவேளையில் வேகமாக மாறி வரும் தொழில்நுட்ப காலத்தில் 6-7 வருடத்தில் புதிய தலைமை மாற்றம் சரியாக இருக்கும் என்றும் கருத்து நிலவுகிறது.
ராஜேஷ் கோபிநாதன் நிர்வாகத்தில் டிசிஎஸ்
டிசிஎஸ் சிஇஓ-வாக சுமார் 6 வருடம் பணியாற்றிய நிலையில், இன்னும் 4 வருடங்கள் அவருடைய பதவி காலம் இருக்கும் வேளையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜேஷ் கோபிநாதன் நிர்வாகத்தின் கீழ் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் வருவாய் இரட்டிப்பு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது, இதேபோல் லாபம் 60 சதவீதம் அதிகரித்துள்ளது. அனைத்தை விடவும் முக்கியமாக டிசிஎஸ் பங்கு மதிப்பு 3 மடங்கு உயர்ந்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications