இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் முன்னாள் சிஇஓ-வான ராஜேஷ் கோபிநாதன் ராஜினாமா செய்வதாகவும், இந்தப் பதவியைக் கே கிருதிவாசன் அவர்களுக்கு அளிக்கப்படுவதாகவும் மார்ச் 16 ஆம் தேதி மாலையில் செய்தி வெளியானது.
இந்தச் செய்தி கேட்டு பலரும் அதிர்ச்சி அடைந்தது மட்டும் அல்லாமல் டிசிஎஸ் நிறுவனத்தின் எதிர்காலம் என்ன என்பது குறித்துப் பல கேள்விகள் எழுந்தது. கே.கருதிவாசன் ஜூன் மாதம் சிஇஓ-வாகப் பதவியேற்று நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வரையில் ராஜேஷ் கோபிநாதன் உதவி செய்தார். இந்த நிலையில் கடந்த 3 மாதத்தில் ராஜேஷ் கோபிநாதன் திடீரென மாயமானார்.

இந்த நிலையில் ராஜேஷ் கோபிநாதன் இப்போது என்ன செய்கிறார் என்ற கேள்வி பெரும்பாலான ஐடி ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. குறிப்பாக இன்போசிஸ், விப்ரோ உயர் அதிகாரிகள் அதிகப்படியாகப் போட்டி நிறுவனத்தில் உயர் பதவியில் அமர்ந்து வரும் வேளையில் டிசிஎஸ் போன்ற பெரும் நிறுவனத்தின் சிஇஓ என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஐடி ஊழியர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்தது.
இந்த நிலையில் தற்போது முக்கியமான விஷயம் தெரிய வந்துள்ளது, டிசிஎஸ் EX-CEO ராஜேஷ் கோபிநாதன் பாஸ்டன் கன்சல்டிங் குரூப்-ன் TMT டெல்லி குழுவின் மூத்த ஆலோசகராக இணைந்துள்ளார். பாஸ்டன் கன்சல்டிங் குரூப்-ன் TMT பிரிவு சர்வதேச ஐடி ஊழியர்கள் மற்றும் டேட்டா சைன்டிஸ்ட் உடன் இணைந்து புதிய ஸ்டேடர்ஜி மற்றும் பிஸ்னஸ் மாடல்களை உருவாக்கியுள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தில் ராஜேஷ் கோபிநாதன்-க்கு 2027 வரையில் சிஇஓ-வாகப் பணியாற்றும் கால அவகாசம் இருந்த போதிலும், பதவிக் காலம் முடிவதற்கு 3 வருடத்திற்கு முன்பே பதவியை ராஜினாமா செய்தார். 2023 ஆம் நிதியாண்டுக்கு மட்டும் ராஜேஷ் கோபிநாதன் சுமார் 30 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றார்.
ராஜேஷ் கோபிநாதனின் உறுதியான முடிவு தான் டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் கொடுத்து ஒட்டுமொத்த ஐடி சேவை துறையைக் காப்பாற்றியது. இல்லையெனில் ஒட்டுமொத்த ஐடி துறையும் மோசமான நிலையை அடைந்திருக்கும், காரணம் இந்திய ஐடி துறையில் முதல் ஆளாக அனைத்து ஊழியர்களுக்கும் வொர்க் ப்ரம் ஹோம் என அறிவித்தது ராஜேஷ் கோபிநாதன் தலைமையிலான டிசிஎஸ் தான்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications