அமெரிக்க ஹெல்த்கேர் நிறுவனமான எபிக் சிஸ்டம்ஸ் தொடுத்த அறிவுசார் சொத்து பயன்பாட்டு விதிமீறல் வழக்கில் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் தோல்வியை சந்தித்த நிலையில் டிசம்பர் காலாண்டில் சுமார் 125 மில்லியன் டாலர் அளவிலான வருமான இழப்பை எதிர்கொள்ள போவதாக டிசிஎஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எபிக் நிறுவனமும், டிசிஎஸ் மற்றும் டாடா அமெரிக்கா நிறுவனமும் தங்களுடைய மியூச்சவல் வாடிக்கையாளருக்கு சேவை செய்யும் போது எவ்விதமான அனுமதியும் இல்லாமல் இணைய போர்ட்டலை பயன்படுத்தியதாக எபிக் தனது வழக்கில் குற்றம் சாட்டியுள்ளது.

எபிக் இணைய தளத்தை பயன்படுத்தி போதுமான தரவுகளை சேகரித்த பின்னர் மெட் மந்த்ரா (Med Mantra) என்ற சொந்தமான மருத்துவமனை மேலாண்மை அமைப்பு மென்பொருளை டிசிஎஸ் நிர்வாகம் தனக்கு போட்டியாக உருவாக்கியது என எபிக் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்க உச்ச நீதிமன்றம் எபிக் சிஸ்டம்ஸ் வழக்கில் $140 மில்லியன் அளவிலான பாதிப்பு ஏற்பட்டு உள்ளதை கணக்கிட்டு 125 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டதை உறுதி செய்து டிசிஎஸ் பங்குச்சந்தையில் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அமெரிக்க வர்த்தகத்தில் டிசிஎஸ் நிறுவனம் intellectual property infringement வழக்கில் தோல்வியுற்றதால் அதன் வர்த்தக வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்த வழக்கில் சுமார் 140 மில்லியன் டாலர் என்பது 1,037 கோடி ரூபாய், இது டிசிஎஸ் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு முடிவின் லாபத்தில் பெரிய ஓட்டையை உருவாக்கும் என்பது தான் இப்போதைய பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் காலாண்டு முடிவில் டிசிஎஸ் நிறுவனம் வருடாந்திர அடிப்படையில் 9 சதவீத வளர்ச்சியில் 11,342 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றது. இதேபோல் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 8 சதவீத வளர்ச்சியில் 59,692 கோடி ரூபாய் அளவிலான வருவாய் பெற்றுள்ளது டிசிஎஸ்.


Click it and Unblock the Notifications