டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக பொறுப்பேற்றுக் கொண்ட நாளில் இருந்து கே.கிருதிவாசன் அடுத்தடுத்து பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார். டிரான்ஸ்அமெரிக்கா வர்த்தகத்தை இழந்ததில் துவங்கி ஊழியர்கள் பணி அமர்த்தியதில் நடந்தது வரை அடுத்தடுத்து வழக்குகளில் தோல்வியைச் சந்தித்துப் பெரும் அபராதத்தை எதிர்கொண்டு வருகிறது டிசிஎஸ் நிறுவனம்.
கடந்த வாரம் அமெரிக்காவின் எபிக் சிஸ்டம்ஸ் தொடுத்த வழக்கில் 125 மில்லியன் டாலர் அபராதம் பெற்ற டிசிஎஸ் இப்போது மீண்டுமொரு வழக்கில் பெரும் தோல்வியைச் சந்திக்க உள்ளது.

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான DXC டெக்னாஜிஸ் நிறுவனத்தின் வர்த்தக ரகசியங்களை டிசிஎஸ் திருடியதாகத் தொடரப்பட்ட வழக்கில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் டாலாஸ் நீதிமன்றம் டிசிஎஸ் தவறு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில் சுமார் 210 மில்லியன் டாலர் அபராதத்தை டிசிஎஸ் பெற உள்ளதாகத் தெரிகிறது.
DXC டெக்னாஜிஸ் நிறுவனம் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை டிசிஎஸ் நிர்வாகம் கடுமையாக மறுத்திருக்கும் வேளையில், டாலாஸ் நீதிமன்றம் இருபக்க வாதங்களை முன்வைக்க உத்தரவிட்டு, விசாரணையில் நீதிமன்றம் முடிவு செய்ய உள்ளது. இந்த வழக்கு டிசிஎஸ் தரப்பிலும் வாதிட முடிவு செய்யப்பட்டு உள்ளதால், இதுகுறித்து எதுவும் பேச முடியாது என டிசிஎஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டில், DXC-ன் முந்தைய நிறுவனமான கம்ப்யூட்டர் சயின்சஸ் கார்ப் (CSC) தனது மென்பொருளை பயன்படுத்த டிரான்ஸ்அமெரிக்கா-வின் துணை நிறுவனமான மணி சர்வீசஸ் இன்க் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கியது. இந்த சாப்ட்வேர் பயன்பாட்டில் டிசிஎஸ் முறைகேடு செய்துள்ளதாக வழக்குத் தொடரப்பட்டு உள்ளது.
டிசிஎஸ் 2018 ஆம் ஆண்டில் டிரான்ஸ்அமெரிக்கா நிறுவனத்திடம் இருந்து 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்றது. இதன் ஒரு பகுதியாக CSC நிறுவனத்தின் மென்பொருளை பயன்படுத்தும் வாய்ப்பு டிசிஎஸ்-க்குக் கிடைத்தது.
இப்போது டிரான்ஸ்அமெரிக்கா-வின் 2200 ஊழியர்களின் ஆக்சஸ்-ஐ பயன்படுத்தி CSC-யின் சாப்ட்வேர்-ன் சோர்ஸ் கோடு மற்றும் பிற தனியுரிமை தகவல்களைக் கைப்பற்றி ஒரு புதிய ஆயுள் காப்பீட்டுத் தளத்தை உருவாக்கியது என டிசிஎஸ் மீது DCX குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட இதேபோன்ற வழக்கை தான் அமெரிக்காவின் எபிக் சிஸ்டம்ஸ் தொடுத்து வழக்கை வென்றது.
அமெரிக்க ஹெல்த்கேர் நிறுவனமான எபிக் சிஸ்டம்ஸ் தொடுத்த அறிவுசார் சொத்து பயன்பாட்டு விதிமீறல் வழக்கில் டிசிஎஸ் தோல்வியைச் சந்தித்த நிலையில் சுமார் 125 மில்லியன் டாலர் அளவிலான அபராதம் விதிக்கப்பட்டது.
எபிக் சிஸ்டம்ஸ் நிர்வாகத்தின் அனுமதியில்லாமல், எபிக் இணையத் தளத்தைப் பயன்படுத்தி முக்கியத் தரவுகளைச் சேகரித்து மெட் மந்த்ரா (Med Mantra) என்ற சொந்த மருத்துவமனை மேலாண்மை அமைப்பு மென்பொருளை டிசிஎஸ் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க உச்ச நீதிமன்றம் எபிக் சிஸ்டம்ஸ் தொடுத்த வழக்கில் 125 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது


Click it and Unblock the Notifications