இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை மற்றும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் எப்போதும் இல்லாத வகையில் புதிய பிரச்சனை உருவாகியுள்ளது. சமீப காலமாக இந்திய ஐடி சேவை நிறுவனங்களில் அட்ரிஷன் விகிதம் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக தான் இருந்தது, ஆனால் அமெரிக்க வங்கி திவால் பிரச்சனைக்கு பின்பு ஊழியர்கள் வெளியேற்றத்தின் அளவு குறைந்து அட்ரிஷன் விகிதமும் குறைந்துள்ளது.
இந்த நிலையில் அனைத்து ஐடி மற்றும் டெக் நிறுவனங்களும் செலவுகளை குறைக்கவும், ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்கவும் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் வித்தியாசமான பிரச்சனைய எதிர்கொண்டு உள்ளது. இதிலும் குறிப்பாக ஜூன் 1 ஆம் தேதி முதல் டிசிஎஸ் சிஇஓ-வாக கிருதிவாசன் பதவியேற்ற பின்பு இந்த பிரச்சனை புதிய நிர்வாகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

பொதுவாக முன்னணி ஐடி சேவை நிறுவனத்தில் ராஜினாமா செய்யும் ஊழியர்கள் எண்ணிக்கையில் பெரும் பகுதி ஊழியர்கள் ஆண்களாக தான் இருப்பார்கள், ஆனால் டிசிஎஸ் நிறுவனத்தில் முதல் முறையாக ராஜினாமா செய்யும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுக்குறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் மனித வள பிரிவு தலைவர் மிலிந்த் லக்காட் கூறுகையில் எப்போது ஆண் ஊழியர்களின் அட்ரிஷன் அளவு குறைவாகவோ அல்லது இணையாகவோ இருக்கும், ஆனால் முதல் முறையாக வரலாற்றில் பெண் ஊழியர்களின் அட்ரிஷன் அளவு அதிகமாக உள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றும் 600000 ஊழியர்களில் சுமார் 35 சதவீதம் ஊழியர்கள் பெண்கள்.
கொரோனா தொற்று காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்ட காலத்தில் பெண்களின் வாழ்க்கையில் ஏற்பட்டு உள்ள மாற்றங்கள் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினாலும், டிசிஎஸ் பெண் ஊழியர்கள் மாற முடியாமல் உள்ளதாக தெரிகிறது. ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்த பின்பு இது நடந்துள்ளதை மிலிந்த் லக்காட் சுட்டி காட்டியுள்ளார்.
டிசிஎஸ் பொதுவாக நிறுவனத்தில் பாலின பாகுபாடு இருக்க கூடாது என்பதில் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கும், இதற்காக பல முயற்சிகளும் எடுத்து வருகிறது. இந்த நிலையில் வாரத்தில் 3 நாள் வொர்க் ப்ரம் ஆபீஸ் கட்டாயமாக்கப்பட்டதால் பெண் ஊழியர்களின் அட்ரிஷன் அளவு அதிகரித்துள்ளது டிசிஎஸ்-ன் முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
இதேவேளையில் இந்த பிரச்சனையை சரி செய்ய புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது, குறிப்பாக பெண் ஊழியர்களை தலைவர்களாக்கும் திட்டங்களும் கையில் எடுக்கப்பட்டு உள்ளது. 2023 ஆம் நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த அட்ரிஷன் அளவு 20 சதவீதத்திற்கு மேல் இருந்து, இதேபோல் புதிதாக சேர்க்கப்பட்ட ஊழியர்களில் 38.1 சதவீதம் பெண்கள்.
மேலும் 'Rebegin' initiative திட்டத்தின் கீழ் முன்அனுபவம் கொண்ட பெண் ஊழியர்களுக்கு சுமார் 14000 பேருக்கு டிசிஎஸ் 2023 ஆம் நிதியாண்டில் வேலைவாய்ப்பை கொடுத்துள்ளது. இதேபோல் உயர்மட்ட நிர்வாக பிரிவில் சுமார் 30000 ஊழியர்கள் பெண்கள், Senior management பிரிவில் இருக்கும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் சுமார் 13 சதவீதம் பேர் பெண்கள்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications