உலகம் முழுவதும் தற்போது ஐடி துறை மந்தமடைந்திருக்கிறது. இந்தியாவை சேர்ந்த ஐடி நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களுக்கு தான் ஐடி சேவை வழங்கி வருகின்றன. அமெரிக்க பொருளாதார மந்த நிலை ,அமெரிக்கா அரசின் வரி விதிப்பு நடவடிக்கை , ஏஐ பயன்பாடு ஆகியவை இந்திய ஐடி துறையை பெருமளவில் பாதிப்படைய செய்திருக்கிறது.
டிசிஎஸ் பணிநீக்கம்: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் திடீரென தங்களுடைய ஊழியர்களில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டது . இதற்கு முன்னதாகவே டிசிஎஸ் நிறுவனம் தன்னுடைய பெஞ்ச் பாலிசி அதாவது ஊழியர்கள் எந்த பிராஜெக்டிலும் இல்லாம்ல் இருக்கும் காலம் தான் பெஞ்ச் காலம், அதில் மாற்றத்தை கொண்டு வந்தது.

பெஞ்ச் பாலிசி: அதாவது ஒரு ஆண்டுக்கு தொடர்ந்து 35 நாட்கள் எந்த ப்ராஜெக்டிலும் இல்லாமல் பெஞ்சில் இருக்கக்கூடிய ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய வழிவகை செய்யும் வகையில் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தது. இந்த சூழலில் டிசிஎஸ் நிறுவன ஊழியர் ஒருவர் தன்னை கட்டாயப்படுத்தி வேலையை ராஜினாமா செய்ய வைத்தனர் என வெளியிட்டு இருக்கும் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கட்டாய ராஜினாமா: டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்த டிரெய்னீ ஊழியர் ரெடிட் தளத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் டிசிஎஸ் ஃபிரஷர்களை பணிக்கு அமர்த்துகிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார். உண்மை அது கிடையாது, அகமதாபாத் மற்றும் புனே ஆகிய இடங்களில் இருக்கும் டிசிஎஸ் அலுவலகங்களில் பணியாற்றி வரக்கூடிய டிரெய்னீ நிலை ஊழியர்கள் கட்டாயப்படுத்தி வேலையில் இருந்து ராஜினாமா செய்யப்பட வைக்கின்றனர் என தெரிவித்திருக்கிறார்.
ரெடிட் பதிவு: நிறுவனம் டிரெய்னீகளை முதல் 5 வாரங்கள் வரை எந்த பிராஜெக்டிலும் சேர்க்காமல் கட்டாயப்படுத்தி பணி ராஜினாமா செய்ய வைத்திருக்கிறது என குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் . சில தினங்களுக்கு முன்னர் என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர் என தெரிவித்திருக்கிறார் . திடீரென ஹெச்.ஆர் இடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது, பேச வேண்டும் என அழைத்தார்கள் நான் சென்றே என்னுடைய போனை சுவிட்ச் ஆஃப் செய்ய சொன்னார்கள் என கூறியுள்ளார்.

மிரட்டி ராஜினாமா: என்னிடம் உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் தருகிறோம், ஒன்று நீங்களே தனிப்பட்ட காரணம் என கூறி வேலையை ராஜினாமா செய்துவிடுங்கள் 3 மாத சம்பளத்தோடு உங்களுக்கு ராஜினாமா கிடைக்கும், இல்லை என்றால் நாங்கள் உங்கள் மீது நெகடிவ் கடிதம் கொடுத்து வேலையை விட்டு நீக்குவோம் என கூறினார்களாம். இதனால் தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் தன் தந்தையிடம் பேச வேண்டும் என கூறியதற்கு ஹெச்.ஆர் அனுமதி வழங்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
15 நிமிடங்களில் முடிந்துவிட்டது: எனக்கு 15 நிமிடங்களே வழங்கப்பட்டன, நான் வேறு வழியில்லாமல் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்கிறேன் என கடிதம் வழங்கிவிட்டு வந்தேன் என தெரிவித்துள்ளார். கட்டாயப்படுத்தி என்னை ராஜினாமா செய்ய வைத்தனர், என்னை போலவே மேலும் சில டிரெய்னீகளும் ராஜினாமா செய்யப்பட வைத்தனர் என கூறியுள்ளார்.
பலரும் ராஜினாமா: இப்படி வேலைக்கு எடுத்து சில மாதங்களிலேயே ராஜினாமா செய்ய வைப்பதற்கு எதற்கு எங்களை வேலைக்கு எடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ள அவர்,12 ஆயிரம் ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவதாக கூறுகிறது டிசிஎஸ் ஆனால் உண்மையில் அது 80 ஆயிரம் வரை இருக்கும் என்பதே என்னுடைய கணிப்பு என அவர் தெரிவித்திருக்கிறார். ஏனெனில் நிறுவனம் கட்டாயப்படுத்தி பலரை ராஜினாமா செய்ய வைக்கிறது அந்த எண்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை எனக் கூறியிருக்கிறார்.
More From GoodReturns

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications