டிசிஎஸ் எடுத்த திடீர் முடிவு.. புதிதாக 2 பிரிவை உருவாக்கிய ராஜேஷ் கோபிநாதன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டுப் புதிதாக இரு பிரிவுகளை உருவாக்கியுள்ளது.

இதன் அடிப்படையில் டாடா குழுமத்தில் அதிகப்படியான லாபத்தை அளிக்கும் டாடா கன்சல்டென்சி சர்வீசஸ் நிறுவனம் டெலிகாம் மற்றும் 5ஜி சொல்யூஷன்ஸ் என்ற புதிய பிரிவுகளை உருவாக்கியும், இப்பிரிவுக்கு இரு முக்கிய நபர்களைத் தலைவர்களாக நியமித்துள்ளது.

டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் தலைமையில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வரும் நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் விரிவாக்கம் முதலீட்டாளர்களுக்குப் பல கேள்விகளை எழுப்பி வருகிறது.

சபாஷ்.. ஜியோவுக்கு டஃப் கொடுக்கும் ஏர்டெல்.. 8 நகரங்களில் 5 ஜி சேவை..இனி ஆட்டம் வேற லெவல்! சபாஷ்.. ஜியோவுக்கு டஃப் கொடுக்கும் ஏர்டெல்.. 8 நகரங்களில் 5 ஜி சேவை..இனி ஆட்டம் வேற லெவல்!

NSS பிரிவு

NSS பிரிவு

டிசிஎஸ் நிறுவனம் தனது கம்யூனிகேஷன்ஸ் மற்றும் மீடியா துறையில் நெட்வொர்க் சொல்யூஷன்ஸ் மற்றும் சர்வீசஸ் யூனிட்-ஐ 5ஜி சேவையை நடைமுறைப்படுத்தவும், இன்ஜினியரிங் சேவைகளை அளிக்கவும் உருவாக்கியுள்ளது. இந்த நெட்வொர்க் சொல்யூஷன்ஸ் மற்றும் சர்வீசஸ் பிரிவை விமல் குமார் இயக்க உள்ளனர்.

CEN பிரிவு

CEN பிரிவு

இதேபோல் cognitive enterprise network unit (CEN) என்ற மற்றொரு பிரிவை என்டர்பிரைசர்ஸ் குரோத் குரூப் துறையில் உருவாக்கியுள்ளது. இந்தப் பிரிவின் கீழ் இன்டலிஜென்ட் நெட்வொர்க் மேனேஜ்மென்ட் சேவைகளை அளிக்க உள்ளது. இந்தப் பிரிவை சத்யா பிட்டா நிர்வாகம் செய்ய உள்ளார்.

 5ஜி சேவை

5ஜி சேவை

வருவாய் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ் 5ஜி சேவையிலும், அதைச் சார்ந்த நெட்வொர்க் மற்றும் இதர வர்த்தகத்திலும் அதிகளவிலான ஆர்வம் காட்டி வருகிறது. இந்தியாவில் 5ஜி சேவைக்காக டெலிகாம் நிறுவனங்கள் அதிகப்படியான முதலீட்டைச் செய்துள்ள நிலையில் இத்துறையின் மீது டிசிஎஸ் அதிகப்படியான நம்பிக்கையை வைத்துள்ளது.

பிஎஸ்என்எல் 4ஜி

பிஎஸ்என்எல் 4ஜி

இதேபோல் டிசிஎஸ் நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவையை அறிமுகம் செய்யச் சுமார் 16000 ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தின் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் உள்ளது. இதேபோல் டிசிஎஸ் மற்றும் Tejas Networks கூட்டணி இவ்விரு நிறுவனத்தின் வாயிலாக 5ஜி துறை சேவைகளை உலக நாடுகளில் இருக்கும் நிறுவனங்களுக்குக் கொண்டு செல்ல முடியும்.

விமல் குமார்

விமல் குமார்

டிசிஎஸ் உருவாக்கிய நெட்வொர்க் சொல்யூஷன்ஸ் மற்றும் சர்வீசஸ் பிரிவின் தலைவர் விமல் குமார் டெலிகாம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளில் பல காலம், பல பெரிய திட்டங்களில் பணியாற்றியுள்ளார். இவர் தற்போது நேரடியாக டிசிஎஸ் சிஓஓ கணபதி சுப்பிரமணியன் கீழ் பணியாற்ற உள்ளார்.

சத்யா பிட்டா

சத்யா பிட்டா

இதேபோல் CEN பிரிவின் தலைவர் சத்யா பிட்டா Cognitive Business Operations (CBO) தலைவர் அசோக பாய் கீழ் பணியாற்ற உள்ளார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் விமல் குமார் மற்றும் சத்யா பிட்டா ஆகிய இருவரும் 1993 ஆம் ஆண்டி டிசிஎஸ் நிறுவனத்தில் சேர்ந்தனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS formed 2 new telecom units for 5G business in india and globally

TCS formed 2 new telecom units for 5G business in india and globally
Story first published: Monday, October 3, 2022, 15:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X