ஐடி துறையின் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நடப்பு நிதியாண்டில் 1 லட்சம் பிரெஷ்ஷர்களை பணியமர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓரு நிதியாண்டில் இந்தளவுக்கு பணியமர்த்தல் செய்யப்படுவது என்பது இந்தியாவிலேயே அதிகமாகும்.
முன்னதாக இந்த நிறுவனம் நடப்பு நிதியாண்டில் 55,000 பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
டிசிஎஸ் பணியமர்த்தல்
ஆனால் அந்த இலக்கினையும் தாண்டி இதுவரையில், 77,000 பேரை பணியமர்த்தியுள்ளது. இது கடந்த 2021ம் நிதியாண்டினை காட்டிலும் அதிகமாகும். கடந்த மூன்றாவது காலாண்டில் மட்டும் இந்த நிறுவனம் 34,000 பேரை பணியமர்த்தியுள்ளது. 4வது காலாண்டிற்கான இலக்கு என்பது இல்லை என்றாலும், தொடர்ந்து பணியமர்த்தல் என்பது அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. ஆக நடப்பு நிதியாண்டில் இலக்கினை தாண்டியும் இந்த பணியமர்த்தல் என்பது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிசிஎஸ்-ன் புதிய மைல்கல்
டிசிஎஸ் நிறுவனம் சமீபத்தில் அதன் மொத்த ஊழியர் தொகுப்பில் 2 லட்சம் பணியாளர்களுடன் புதிய மைல்கல்லை எட்டியது. இந்த நிலையில் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை பணியமர்த்திய ஒரு நிறுவனமாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் பணியமர்த்தல் அதிகரிக்கும்போது இன்னும் மிகப்பெரிய நிறுவனமாக டிசிஎஸ் உருவெடுக்கும்.
இன்ஃபோசிஸ்-ன் மெகா திட்டம்
இதே நாட்டின் மற்றோரு முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நடப்பு ஆண்டில் 55,000 பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தொடர்ந்து தேவை வலுவாக இருந்து வரும் நிலையில், இந்த பணியமர்த்தல் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக ஐடி நிறுவனங்களின் அட்ரிஷன் விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது ஐடி துறையில் விலைபோரினை போல, திறமைக்கான ஒரு போரினை உருவாக்கியுள்ளது எனலாம்.
விப்ரோவின் திட்டம்
இதேபோல விப்ரோ நிறுவனமும் அடுத்த நிதியாண்டில் 30,000 பிரெஷ்ஷர்களை பணியமர்த்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் புதியதாக பணியமர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,500 ஆக இருக்கும். இது நடப்பு நிதியாண்டில் மொத்த பணியமர்த்தலில், 70% பேருக்கும் அதிகமாக கேம்பஸ் இண்டர்வியூ மூலமான பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
நல்ல எதிர்காலம் உண்டு
பரவி வரும் பெரும் தொற்றுக்கு மத்தியில் ஐடி துறையில் தேவையானது இன்னும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் அட்ரிஷன் விகிதமும் பல முன்னணி நிறுவனங்களில் அதிகரித்து வருகின்றது. இது மேற்கொண்டு பணியமர்த்தலை அதிகரிக்க காரணமாக அமையலாம். இதற்கிடையில் ஐடி பிரெஷ்ஷர்களுக்கும், ஐடி திறனுள்ள ஊழியர்களுக்கும் தொடர்ந்து நல்ல எதிர்காலம் காத்துக் கொண்டுள்ளது எனலாம்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications