இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் (TCS), அரசு கொள்முதல் போர்ட்டலான GeM-ஐ இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும் முக்கியமான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் திங்கள்கிழமை தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு Government e-Market (GeM)போர்டல் ஆகஸ்ட் 9, 2016 அன்று வணிக அமைச்சகத்தால், அனைத்து மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகள் இந்த பிரத்தியேக ஆன்லைன் தளத்தின் வாயிலாக பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்காக துவங்கப்பட்டது.

இந்த புதிய கட்டமைப்பை மேம்படுத்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தொடர்ந்து முயற்சித்து வருவதாக பியூஷ் கோயல் கூறினார். இந்த நிலையில் இத்தளத்தை மேம்படுத்துவதற்கான புதிய ஒப்பந்தாரர்-ஐ சேர்வு செய்துள்ளோம், டிசிஎஸ் இதற்கான ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளது என பியூஷ் கோயல் தெரிவித்தார்.
இந்த போர்டலைப் பயன்படுத்தி மத்திய மற்றும் மாநிலத் துறைகள் தங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை நேரடியாக வாங்குவதன் மூலம் அதிகப்படியான அரசின் பணம் மிச்சப்படுத்த முடியும். இதில் சேமிக்கப்பட்ட பணத்தை மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும், இதேபோல் மக்களின் வரி பணத்தைச் சேமிக்கவும் உதவுகிறது என்றும் பியூஷ் கோயல் கூறினார்.
Government e-Market (GeM) தளத்தில் கடந்த ஆண்டு 2 லட்சம் கோடி ரூபாய் மத்தியிலான பொருட்கள் மற்றும் சேவைகளை நேரடியாக பெறப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இது 3 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தளத்தில் 63000 அரசு தரப்பு buyer-களும், 62 லட்சம் செல்லர்களும் உள்ளனர்.
இத்தளத்தில் பேப்பர் கிளிப் முதல் வாகனங்கள், கம்பியூட்டர்கள், அலுவலக பர்னிச்சர்கள் வரையில் வாங்க முடியும். இதேபோன்ற தளத்தை தென் கொரிய அரசு KONEPS என்ற பெயரில் வழங்கி வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் Government e-Market (GeM) போர்டல் உலகிலேயே 2வது பெரிய தளமாக உள்ளது.
மத்திய அரசு வருமான வரி தளத்தின் பணிகளை இன்போசிஸ் நிறுவனத்திடம் இருந்து கொடுத்த நிலையில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டது. இதனால் இந்த முறை Government e-Market (GeM)போர்டல் திட்டத்தின் பணிகளை டிசிஎஸ் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications