டாடா குழுமம், அதன் டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்தியாவின் பிரபல ஸ்னாக்ஸ் மற்றும் தின்பண்டங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹல்திராம் (Haldiram's) நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.
ஆனால் அதே நேரத்தில் Haldiram's நிர்வாகம் தனது நிறுவனத்தின் மதிப்பீட்டை 10 பில்லியன் டாலராக மதிப்பீட்டு உள்ளது, டாடா குழுமத்திற்கு பெரும் தடையாக இருக்கிறது என்றும் கூறப்பட்டது. டாடா குழுமம் மற்றும் ஹல்திராம்ஸ் ஒப்பந்தம் முதலீட்டாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் டாடா குழுமம், ஹால்திராம்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் தங்களுக்கு மத்தியிலான பேச்சுவார்த்தையை மறுத்துள்ளது. இதனால் இன்று டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் விலை 2.45 சதவீதம் சரிந்து 858.35 ரூபாயாக சரிந்துள்ளது. இன்று அதிகப்படியாக 853.85 ரூபாய் அளவில் சரிந்தள்ளது.
இதேவேளையில் டாடா குழுமத்தின் ஐடி சேவை பிரிவான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் பிரிட்டன் நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஜாகுவார் லாண்ட்ரோவர் நிறுவனத்திடம் இருந்து 800 மில்லியன் யூரோ கிட்டத்தட்ட 8100 கோடி ரூபாய் மதிப்பிலான டெக் சேவை அளிப்பதற்கான திட்டத்தை கைப்பற்றியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஜாகுவார் லாண்ட்ரோவர் நிறுவனம் தனது வர்த்தக கட்டமைப்பை மேம்படுத்த டிசிஎஸ் நிறுவனத்திடம் டெக் உதவிகளை பெறுவதற்காக 8100 கோடி ரூபாய் மதிப்பிலான 5 வருட திட்டத்தில் ஒப்பந்தம் செய்து உள்ளது.
ஜாகுவார் லாண்ட்ரோவர் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் கீழ் இயங்கினாலும் தனது நிதியியல் கணக்குகள் அனைத்தும் தனியாக நிர்வாகம் செய்யப்படுகிறது. இதேபோல் டிசிஎஸ் நிறுவனம் டாடா சன்ஸ் கீழ் இயங்கும் நிறுவனமாகும். JLR திட்டம் மூலம் டிசிஎஸ் பங்குகள் 0.88 சதவீத பங்குகளை கைப்பற்றியுள்ளது.
ஜாகுவார் லாண்ட்ரோவர் - டிசிஎஸ் மத்தியிலான ஒப்பந்தம் கீழ் இதன் டிஜிட்டல் கட்டமைப்பை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் எதிர்காலத்திற்கு தேவையான திறன்வாய்ந்த பணியாளர் படையை தயாரிக்க வேண்டும் என்பது தான். இந்த ஒப்பந்தம் கீழ் அப்பிளிகேஷன் டெவலப்மென்ட், அப்பிளிகேஷன் மெயின்டனென்ஸ், என்டர்பிரைஸ் இன்பரா மேனேஜ்மென்ட், கிளவுட் மைகிரேஷன், சைபர் செக்யூரிட்டி, டேட்டா சர்வீசஸ் ஆகியவற்றில் டிசிஎஸ் உதவ உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications