இந்திய டெலிகாம் சேவையும், இண்டர்நெட் வேகமும் பெரிய அளவில் மேம்பட்டு உள்ள நிலையில், மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் BSNL நிறுவனம் மட்டும் 5 வருடம் பின்தங்கியுள்ளது. இது மட்டும் அல்லாமல் தொடர்ந்து வர்த்தகம், வாடிக்கையாளர், வருமானம் என அனைத்திலும் சரிவை நோக்கியுள்ளது. இதை மாற்றும் வகையில் BSNL 4G சேவையை அறிமுகம் செய்ய முடிவு செய்தது.
BSNL நிறுவனத்திடம் 4ஜி சேவையை அளிப்பதற்கான தொழில்நுட்பமும் கட்டமைப்பும் இல்லாத காரணத்தால் சில வருடங்களுக்கு 4ஜி சேவைக்கான தொழில்நுட்பம், கருவிகள் என ஒட்டுமொத்த கட்டமைப்பையும் சொந்தமாக தயாரித்து, நிறுவ வேண்டும் என திட்டமிட்டது.

இந்த திட்டத்தின் அடிப்படையில் உருவான கூட்டணி தான் BSNL, TCS, மத்திய அரசின் Centre for Development of Telematics (C-DoT), டாடா குழுமம் கைப்பற்றிய Tejas Networks. இக்கூட்டணி 4ஜி சேவைக்கான தொழில்நுட்பத்தை தயாரித்த நிலையில் இந்தியாவில் 1 லட்சம் 4ஜி சேவை தளத்தை அமைக்க கடந்த வாரம் மத்திய அமைச்சரவை குழு டிசிஎஸ்-க்கு ஒப்புதல் அளித்தது.
இதை தொடர்ந்து இதற்கான கருவிகளை வாங்க டாடா குழுமத்தின் டிசிஎஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசின் ஒப்புதல் உடன் BSNL நிறுவனத்திடம் இருந்து சுமார் 15000 கோடி ரூபாய் மதிப்பிலான advance purchase order (APO) பெற்றுள்ளது. டாலர் மதிப்பில் கிட்டத்தட்ட 1.8 பில்லியன் டாலர், சமீபத்தில் டிசிஎஸ் பெற்ற மிகப்பெரிய மதிப்புடைய டீல்களில் BSNL முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
பொதுவாக ஐடி சேவை நிறுவனங்களுக்கு 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக திட்டங்களை பெறுவது என்பது மிகவும் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இதிலும் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய சந்தையின் வீழ்ச்சி மூலம் ஐடி நிறுவனங்கள் புதிய வர்த்தகத்தை பெற முடியாமல் தவிக்கும் இந்த நேரத்தில் டிசிஎஸ் இந்தியாவில் இருந்தே 1.8 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தை கைப்பற்றியுள்ளது.
இந்தியாவின் டாப் ஐடி நிறுவனங்கள் அனைத்தும் அதிகளவிலான வர்த்தகத்தை அமெரிக்கா, ஐரோப்பிய சந்தையில் வைத்திருக்கும் நிலையில் ஐடி நிறுவனங்களுக்கு இது மிகவும் மோசமான காலமாகவே இருக்கிறது. டிசிஎஸ் ஜனவரி - மார்ச் காலாண்டில் பெற்ற அதிக மதிப்புடைய திட்டம் 750 மில்லியன் டாலர். BSNL ஆர்டர் கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகம்.
BSNL நிறுவனம் 2019 முதல் 4ஜி சேவை அறிமுகம் செய்வது குறித்து பேசி வருகிறது, 2023 இறுதி அல்லது 2024ல் தான் BSNL தனது 4ஜி சேவையை மக்களுக்கு வழங்கும். இந்தியாவில் இருக்கும் தனியார் முதலீட்டு நிறுவனங்கள் அனைத்தும் 4ஜி சேவையில் இருந்து 5ஜி சேவைக்கு மாறி வரும் வேளையில் BSNL 4ஜி சேவைக்கு செல்கிறது.

4ஜி சேவைக்கான தொழில்நுட்பம், கருவிகள் என ஒட்டுமொத்த கட்டமைப்பையும் சொந்தமாக இந்தியாவில் தயாரிக்க 200 கோடி ரூபாய் மதிப்பில் POC -க்கு செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications