ஏஐ தொழில்நுட்பம் செய்யப்போகும் மேஜிக்.. இந்திய ஐடி துறையை நம்பினோர் கைவிடப்படார்..!

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் ஹெச்சிஎல் நேற்று தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ள வேளையில், முதலீட்டாளர்கள் இனி டெக் துறையில் முதலீடு செய்யலாமா வேண்டாமா என்ற மிகப்பெரிய குழப்பத்தில் உள்ளனர்.

இந்திய முதலீட்டாளர்களுக்கு கடந்த 10 வருடத்தில் பெரும் லாபத்தை கொடுத்தது ஐடி சேவை துறை தான், ஆனால் தற்போது ஏஐ, ஆட்டோமேஷன் அச்சத்தால் ஐடி துறை பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் பெரிய லாபத்தை பார்க்க முடியுமா என்பது முதலீட்டாளர்கள் மத்தியில் பில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

ஏஐ தொழில்நுட்பம் செய்யப்போகும் மேஜிக்.. இந்திய ஐடி துறையை நம்பினோர் கைவிடப்படார்..!

கடந்த 15 ஆண்டுகளில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) பங்கிகள் 10 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் நிப்டி-50 குறியீடு 5 மடங்கு மட்டுமே வளர்ந்துள்ளது. இந்த வித்தியாசத்தை புரிந்துகொண்டாலே, அடுத்த பொருளாதார சுழற்சியில் பணம் சம்பாதிக்க தயாராகிவிடலாம் என முதலீட்டு வல்லுனரான அக்ஷத் ஸ்ரீவஸ்தவா தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

2000-2010 தொழில்நுட்ப சுழற்சி:
2000-2010 காலகட்டம் உலகளவில் தொழில்நுட்ப துறை இண்டர்நெட் பயன்பாட்டு காரணமாக விரிவாக்க அடைந்து வந்தது. கூகுள், அமேசான் போன்ற நிறுவனங்கள் டாட் காம் வீழ்ச்சியை தாண்டி வலுவாக நின்றது. இத்தகைய பெரும் வீழ்ச்சியில் இருந்து தப்பித்த நிறுவனங்களின் அப்போதைய இலக்காக இருந்தது, செலவுகளை குறைக்க புதிய வழிகளை தேடுவது தான்.

இப்படி தேடும் நிறுவனங்களுக்கு இந்தியாவில் டெக் தொழிலாளர் செலவு குறைவு இருந்தது, வரபிரசாதமாக இருந்தது. அமெரிக்காவில் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியருக்கு 100,000 டாலர் சம்பளமாக கொடுக்க வேண்டியிருந்தால், இந்தியாவில் 20,000-30,000 டாலருக்கு அதே வேலையை செய்ய முடிந்தது. இதனால் அமெரிக்க நிறுவனங்கள் கண்களை மூடிக்கொண்டு இந்த வாய்ப்பை பயன்படுத்தி லாபத்தை அதிகரித்தன.

இந்தியாவில் ஐடி துறை வளர்ச்சி
இந்த செலவு வித்தியாசம் வாயிலாக இந்தியாவில் டெக் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாக்கியது. இதன் மூலம் அதிக சம்பளத்தில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவானது, இதனால் மக்கள் மத்தியில் செல்வம் அதிகரித்தது, இதன் மூலம் நாட்டில் நுகர்வும் வளர்ச்சி அடைந்தது. கடந்த சுழற்சியில் இந்தியாவில் ஐடி நிறுவனங்கள் முதன்மை பயனாளிகளாக இருந்தன. இந்த சுழற்சி 2022-இல் முடிந்தது.

புதிய சுழற்சி: 2022 முதல் AI வரை
2021-இல் வட்டி விகிதங்கள் உயர்ந்ததால் முதலீட்டு சந்தைகள் சரிந்தன. இந்த நிதி பிரச்சனையை கடந்த நிறுவனங்கள் உற்பத்தி துறை சொத்துகளில் முதலீடு செய்தன. உதாரணமாக இந்தியாவில் துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் போன்றவற்றில் அதிகப்படியான முதலீடுகள் குவிந்தன. ஆனால் அமெரிக்காவில் இந்த முதலீடு AI துறை பக்கம் திரும்பியது.

இத்தகைய சூழ்நிலையில் எந்த பிரிவில் வளர்ச்சியும், லாப வீதமும் அதிகமாக இருக்கும், வேகமாக உயரும் என்று யோசியுங்கள். கட்டாயம் டெக் துறையில் தான்.

மெட்டா முதலீட்டு திட்டம்
பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப் உரிமையாளரான மெட்டா நிறுவனம் ஏஐ துறையில் மிகப்பெரிய திட்டத்தை உருவாக்கி வருகிறது. இதற்காக இந்நிறுவனம் 2026-2028ஆம் ஆண்டுக்களில் Capex (மூலதன செலவு) ஆக 600 பில்லியன் டாலருக்கு மேல் செலவு செய்யும் திட்டத்தில் உள்ளது.

இதேவேளையில் இந்தியாவில் உள்ள பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒரு ஆண்டுக்கான கேபெக்ஸ் 160-170 பில்லியன் டாலர் மட்டுமே. அதாவது 500 இந்திய நிறுவனங்களின் செலவு = 1 அமெரிக்க நிறுவனத்தின் செலவு. இதற்கு ஏற்ப வளர்ச்சி தான் வரும் காலத்தில் வரும்.

அடுத்த வளர்ச்சி:
ஆக தற்போது நாம் AI அலையின் நடுவில் உள்ளோம். அடுத்த பெரிய சந்தை வளர்ச்சி அமெரிக்கா அல்லது சீனாவில் இருந்து உருவாகும் என கணிக்கப்படுகிறது. இந்த சுழற்சியின் பயன்கள் இந்தியாவுக்கு அடுத்த சுழற்சியிலும் கட்டாயம் வரும் என்பது தான் உண்மை. கடந்த சுழற்சியில் நடந்தது போல, அடுத்த சுழற்சியிலும் இந்திய டெக் நிறுவனங்கள் கட்டாயம் நன்மை அடையும்.

சரி, இதனால் இந்திய ஐடி நிறுவனங்களில் இப்போதே பணத்தை கொட்ட வேண்டுமா..? என்றால் இல்லை. பயந்து வெளியேற வேண்டுமா..? என்றால் இல்லை. வாய்ப்பு வரும் போது மிஸ் பண்ணிட கூடாது என்ற யதார்த்தவாதியாக இருப்பது தான் சரியான நிலைப்பாடு.

இதனால் இந்திய முதலீட்டாளர்கள் தொடர்ந்து டெக் துறையை ஆய்வு செய்து, கண்காணித்து, சரியான நிறுவனங்களில் சரியான நேரத்தில் முதலீடு செய்வது மூலம் பெரிய லாபத்தை பெற முடியும்.

இதைவிட முக்கியமாக இந்த டெக் சுழற்சி முடியும் போது இழப்பை குறைக்க பங்குகளை விற்பனை செய்யும் முடிவு எடுக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த இடத்தில் தான் லாபத்தை தக்கவைத்து எடுத்துக் கொள்ள முடியும். இதை மிஸ் செய்துவிட்டால் மீண்டும் இழப்பு தான் மிஞ்சும். டெக் நிறுவனத்தில் முதலீடு செய்துவிட்டோம், இனி நம்மதியாக இருக்கலாம் என்ற நிலைப்பாடு எப்போதும் இருக்க கூடாது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+