இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் அதிகப்படியான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் வேளையில், அமெரிக்காவில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்க செனேட்டர்கள் அமெரிக்காவில் அதிகப்படியான ஊழியர்களை ஹெச்1பி விசாவில் கொண்டு வரும் நிறுவனங்களை டார்கெட் செய்து கேள்விகளை தொடுத்தனர்.
இதன் பின்பு டிசிஎஸ் நிறுவனம் தனது அமெரிக்க வர்த்தகத்தை நிர்வாகம் செய்யும் முறையில் முக்கியமான மாற்றத்தை செய்ய முடிவு செய்துள்ளது. இதுக்குறித்து டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தின் சிஇஓ கே.கிருதிவாசன் முக்கியமான விஷயத்தை தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் டிசிஎஸ் நிர்வாகம் புதிதாக H-1B விசா வைத்துள்ளவர்களை பணியில் அமர்த்த எந்த திட்டமும் இல்லை என்று கே.கிருதிவாசன் அறிவித்துள்ளார். டிசிஎஸ் நிறுவனம் இனி அமெரிக்க வர்த்தகத்தை தற்போது உள்ளூர் பணியாளர்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும் என்று தெரிவித்தார்.
அமெரிக்காவில் H-1B விசா மூலம் அதிகளவில் பணியில் அமர்த்தும் மிகப்பெரிய நிறுவனமான TCS-ன் வர்த்தக நடைமுபையில் புதிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த முடிவின் மூலம் இந்தியாவில் இருந்து ஹெச்1பி விசா மூலம் செல்வோர் எண்ணிக்கை பெரிய அளவில் குறையும், இதேபோல் அமெரிக்காவில் ஹெச்1பி விசா வைத்துள்ளவர்களையும் நியமிப்பதை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கிருதிவாசன் கூறுகையில், அமெரிக்காவில் ஏற்கனவே H-1 விசா ஊழியர்கள் போதுமான அளவுக்கு உள்ளனர். இப்போது இப்பிரிவு ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்க எந்த திட்டமும் இல்லை என்று தெரிவித்தார்.
இதேபோல் தற்போதை வர்த்தகத்தை நிர்வாகம் செய்ய அமெரிக்காவில் இருக்கும் பணியாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தி, H-1B விசா தொழிலாளர்களின் ப்ராஜெக்ட் முடிந்த பிறகு தாயகத்திற்கு திரும்ப அனுப்பி, தேவை இருப்பின் அவர்களை திருப்ப அழைப்பு தான் டிசிஎஸ் நிறுவனத்தின் வழக்கமான திட்டம்.
H-1B விசாவுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் விதிக்கப்பட்டு இருக்கும் வேளையில், கிருதிவாசன் ஹெச்1பி விசா ரினிவல் குறித்து கூறுகையில், நாங்கள் எப்போது, யாருடைய விசாவை ரினிவல் செய்ய வேண்டும் என்பதை தகுந்த நேரத்தில் முடிவு செய்வோம். இதேவேளையில் அமெரிக்காவில் உள்ளூர் ஊழியர்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்போகிறோம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதேபோல் டிசிஎஸ் ரினிவல்-க்கு டிரம்ப் அரசு தற்போது எவ்விதமான கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை என்பதால் தற்போது விசா வைத்திருக்கும் ஊழியர்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் தான் டிசிஎஸ்-ன் அமெரிக்க வர்த்தகத்தின் முதுகெலும்பாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

L-1 விசா ஒரு வரபிரசாதம்..
H-1B நெருக்கடி காரணமாக இனி வரும் காலக்கட்டத்தில் இந்திய ஐடி நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த அமெரிக்க டெக் துறையும் L-1 விசாவை அதிகளவில் பயன்படுத்த உள்ளது. தொழில்துறை நிபுணர்களின் கணிப்பின் H-1B விசா வைத்துள்ளவர்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்படும், அதேநேரம், L-1 விசா மீது கவனம் திரும்பும் என தெரிவித்துள்ளனர்.
இந்த எல்-1 விசா மூலம் நிறுவனங்கள் தங்களுடைய வெளிநாட்டு கிளைகளிலிருந்து அமெரிக்க கிளைகளுக்கு ஊழியர்களை மாற்ற அனுமதிக்கிறது. உதாரணமாக பிரிட்டன் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு ஊழியர் எல் 1 விசா மூலம் அமெரிக்க அலுவலகத்தில் எளிதாக பணியில் சேர்ந்து பணியாற்ற முடியும்.
இந்த வழியில் இந்திய ஐடி நிறுவனங்கள் இனி பிரிட்டன், துபாய் போன்ற பிற நாடுகளில் அதிகளவில் பணியில் அமர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications