இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நாளை 2025-26 நிதியாண்டுக்கான இரண்டாவது காலாண்டு முடிவுகள் உடன் இடைக்கால ஈவுத்தொகையை கொடுப்பது குறித்த முடிவை டிசிஎஸ் நிர்வாகம் அறிவித்து, ஜூலை-செப்டம்பர் காலாண்டு முடிவுகள் வெளியிடும் சீசனை துவக்க உள்ளது.
ஆனால் டிசிஎஸ் இக்காலாண்டு முடிவுகளில் சிறிய மாற்றம், அக்டோபர் 9-ஆம் தேதி பங்குச்சந்தை வர்த்தக நேரத்திற்குப் பிறகு வெளியிடப்படும் என்று நிறுவனம் செப்டம்பர் 23-இல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எப்போதும் நடக்கும் செய்தியாளர்கள் சந்திப்பு நாளை நடக்காது.

TCS நிறுவனத்தின் சிஇஓ-வான கே.கிருதிவாசன் தலைமையில் நடக்கும் இந்த காலாண்டு முடிவுகள் கூட்டத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம், அக்டோபர் 9-ஆம் தேதி ரத்தன் டாடாவின் மறைவு முதலாம் ஆண்டு நினைவு நாள் என்பதால் நாளை மாலை 5:30 மணிக்கு திட்டமிட்டப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து ஹிந்து பிசினஸ்லைன் வெளியிட்டுள்ள செய்தியில், நிறுவனத்தின் உள்விவகார தகவல்களை மேற்கோள் காட்டி இதை உறுதி செய்வதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ரத்தன் டாடா மறைவின் காரணமாகவும், டிசிஎஸ் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பின்பு செய்தியாளர்கள் சந்திப்பை ரத்து செய்தது. இதேபோலவே முதலாம் ஆண்டு நினைவு நாள் காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும், பங்கு சந்தை வல்லுநர்களுக்கான analyst call நிகழ்வு திட்டமிட்டபடி அக்டோபர் 9-இல் நடைபெறும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
ஆனால் சமுக வலைத்தளத்தில் டிசிஎஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் பணிநீக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தாலும், குறிப்பாக புனே அலுவலகத்தில் சமீபத்தில் நடந்த பிரச்சனையின் காரணமாக செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகி வருகிறது. இது முற்றிலும் உறுதிப்படுத்தாத தகவலாகவே உள்ளது.
TCS நிறுவனத்தின் இந்த இரண்டாம் காலாண்டு முடிவுகள் மிகவும் முக்கியமானது, காரணம் இக்காலாண்டில் இந்திய ஐடி துறை நிறுவனங்கள் எப்போதும இல்லாமல் அதிகப்படியான சவால்களால் சந்திக்கும் சூழல்நிலை உருவாகிய காலமாக உள்ளது.
ஒருபக்கம் ஏஐ தொழில்நுட்ப எழுச்சியால் வேலைவாய்ப்பு குறைப்பு, மறுபக்கம் H-1B விசா மீதான டிரம்ப் அரசு அறிவித்துள்ள 1 லட்சம் டாலர் கட்டணம் இதன் மூலம் ஏற்படும் அமெரிக்க வர்த்தகத்தில் சரிவு என சுத்தி சுத்தி பல இடத்தில் பெரிய அளவிலான பாதிப்புகள் உருவாகியுள்ளது.
இதேவேளையில் ஐடி சேவை துறையில் டிசிஎஸ்-ஐ காட்டிலும் பெரிய நிறுவனமாக திகழும் அக்சென்சர் ஊழியர்கள் எண்ணிக்கையிலும், முதலீட்டிலும், பல மாற்றங்களை செய்துள்ளது. இதேபோல் வருவாய், லாப கணிப்புகளையும் குறைத்துள்ளது. இதே சூழ்நிலையில் தான் டிசிஎஸ்-ம் இருக்கும் காரணத்தால் இக்காலாண்டு முடிவுகள் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
இதை விட முக்கியமாக டிரம்ப் அரசு அமெரிக்க நிறுவனங்கள் தங்களுக்கான தொழில்நுட்ப திட்டங்களை அவுட்சோர்சிங் செய்யும் நிறுவனங்களுக்கு டிரம்ப் நிர்வாகத்தின் 25 சதவீத வரி பரிந்துரை செய்துள்ளது. இது டிசிஎஸ் உட்பட அனைத்து ஐடி சேவை நிறுவனங்களின் வருவாய், வர்த்தகத்தை பெரிய அளவில் பாதிக்கும் என்பதால் டிசிஎஸ் போன்ற நிறுவனங்களின் அடுத்தக்கட்ட திட்டத்தை முதலீட்டாளர்கள் தெரிந்துக்கொள்ள இக்காலாண்டு முடிவுகள் மிகவும் முக்கியமானதாக உள்ளது.
More From GoodReturns

ஜெமினி, கிளாட்-க்கு வேட்டு..!! OpenAI நிறுவனத்தில் உருவாகிய புதிய பதவி..! இனி இதற்கு தான் எதிர்காலம்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications