பெங்களூரு: இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஜெனரேட்டிவ் பிரிவுகளில் சுமார் 600 பிராஜெக்டுகளை கையாண்டு வருவதாக தெரிவித்துள்ளது. தற்போது உலக அளவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஜெனரேட்டிவ் ஏஐ பயன்பாடு அதிகரித்து வருகிறது. எனவே ஐடி சேவை சார்ந்த நிறுவனங்கள் தங்களுடைய கவனத்தை முழுவதும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த திட்டங்களை நோக்கி திருப்பி உள்ளன. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி மென்பொருள் சேவை நிறுவனமான டிசிஎஸ் தற்போது தங்கள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஜெனரேட்டிவ் ஏஐ பிரிவுகளில் சுமார் 600 திட்டங்களை கையாண்டு வருவதாக தெரிவித்துள்ளது.
முதல் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஜெனரேட்டிவ் ஏஐ பிரிவுகளில் 1.5 மில்லியன் டாலர் அளவிலான திட்டங்களை வைத்திருப்பதாக கூறியது. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 900 மில்லியன் டாலர்கள் அதிகமாகும். தங்களுடைய வாடிக்கையாளர்கள் பலரும் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஜெனரேட்டிவ் ஏஐ ஆகியவற்றை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கி இருப்பதாகவும் இந்த பிரிவில் அவர்கள் அதிக முதலீடு செய்ய முன்வந்திருப்பதாகவும் டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்காக தங்களுடைய நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சேவைகளில் அதிக கவனம் செலுத்தி வருவதாக டிசிஎஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் பல்வேறு நிறுவனங்களும் தற்போது செயற்கை நுண்ணறிவு மற்றும் ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தகவமைத்து வருவதாக தெரிவித்துள்ள டிசிஎஸ் நிறுவனம் இந்த துறை வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது என கூறியுள்ளது.
கடந்த மாதம் இந்தியாவின் மற்றொரு பெரிய ஐடி நிறுவனமான அசெஞ்சர் தங்கள் நிறுவனம் ஒரு பில்லியன் டாலர் அளவிலான ஜெனரேட்டிவ் திட்டங்களை கையில் வைத்திருப்பதாக கூறியது தற்போதைய சூழலில் இந்தியாவில் செயல்படக்கூடிய ஐடி நிறுவனங்களிலேயே டிசிஎஸ் மற்றும் அசெஞ்சர் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டும்தான் செயற்கை நுண்ணறிவு பிரிவில் தங்கள் நிறுவனம் எவ்வளவு ரூபாய் மதிப்பிலான திட்டங்களை கையில் வைத்திருக்கிறது என்ற தகவலை வெளியிட்டுள்ளன.
அசெஞ்சர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜூலி ஸ்வீட் ஜெனரேட்டிவ் ஏஐ பிரிவில் தங்களது நிறுவனம் பெருமளவில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். அடுத்த பத்து ஆண்டு காலத்தில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வரக்கூடிய ஒரு தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். நடப்பாண்டில் மட்டும் தங்கள் நிறுவனம் புதிதாக 3 பில்லியன் டாலர் அளவிலான ஆர்டர்களை பெற்றிருப்பதாக கூறியுள்ளார்.
Written by: Devika


Click it and Unblock the Notifications