ஐடி ஊழியர்களே உஷாரா இருங்க.. டிசிஎஸ், அக்சென்சர், ஹெச்சிஎல் திடீர் முடிவு..!

இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தக சந்தை கடந்த 3 வருடமாக அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்ட நிலையிலும் இந்திய ஐடி துறை பெரிய அளவில் உறுதுணையாக இருந்தது என்றால் மிகையில்லை.

அதிகப்படியான வேலைவாய்ப்பு, வீட்டில் இருந்து பணியாற்றினாலும் முழு சம்பளம் என மொத்த நுகர்வோர் சந்தையை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றியது ஐடி துறை என்றால் மிகையில்லை, ஆனால் இப்போது நிலைமை மொத்தமாக மாறியுள்ளது என்றால் மிகையில்லை.

குறிப்பாக முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் ஊழியர்களை பணியில் அமர்த்துவதை பெரிய அளவில் குறைத்துள்ளது.

ஐடி நிறுவனங்கள்

ஐடி நிறுவனங்கள்

டிசிஎஸ், அக்சென்சர், ஹெச்சிஎல் உள்ளிட்ட இந்திய ஐடி நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 2,000 முதல் 15,000 ஊழியர்களை மட்டுமே புதிய பணியில் சேர்த்துள்ளது. இது முந்தைய காலாண்டுகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை மட்டுமே பணியில் அமர்த்தியுள்ளது.

பணவீக்கம் மற்றும் புவிசார் அரசியல் பிரச்சனை

பணவீக்கம் மற்றும் புவிசார் அரசியல் பிரச்சனை

இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் பணவீக்கம் மற்றும் புவிசார் அரசியல் அழுத்தங்களை சமாளிக்க முன்னெச்சரிக்கையாக பணியமர்த்தும் எண்ணிக்கையை குறைத்துள்ளது. அமெரிக்காவில் கூகுள், மைக்ரோசாப்ட், டெஸ்லா, மெட்டா போன்ற முன்னணி டெக் நிறுவனங்களும் பணி அமர்த்துவதை நிறுத்த முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அக்சென்சர்

அக்சென்சர்

ஐடி துறையின் பெரு நிறுவனங்களில் ஒன்றான அக்சென்சர் கடந்த மூன்று காலாண்டில் சராசரியாக 40,000 பேர் பணியமர்த்தப்பட்ட நிலையில், மே மாதத்தில் முடிவடைந்த மிக சமீபத்திய காலாண்டில் 12,000 நபர்களை மட்டுமே பணியமர்த்தியது. மே மாத துவக்கத்தில் அக்சென்சர் சுமார் 1,50,000 ஊழியர்களை புதிதாக நியமிக்க திட்டமிட்டு உள்ளது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 14,136 புதிய ஊழியர்களை பணியமர்த்தியுள்ளது, இது முந்தைய நிதியாண்டில் சராசரியாக ஒரு காலாண்டில் பணியமர்த்தப்பட்ட எண்ணிக்கை 26000 ஆனால் ஜூன் காலாண்டில் இது பெரிய அளவிலான சரிவு. கடந்த 12 மாதங்களில் டிசிஎஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் 19.7% விகிதமாக உள்ளது.

HCL டெக்னாலஜிஸ்

HCL டெக்னாலஜிஸ்

இதேபோலவே, HCL டெக்னாலஜிஸ் 2023 நிதியாண்டின் முதல் காலாண்டில் 2,089 புதிய ஊழியர்களை மட்டுமே பணியமர்த்தியுள்ளது. FY22 இன் இறுதி காலாண்டில் 11,000 புதிய ஊழியர்களை பணியமர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 12 மாதங்களில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 23.8 சதவீதமாக உள்ளது.

ரெசிஷன் அச்சம்

ரெசிஷன் அச்சம்

இதேவேளையில் இனி வரும் காலாண்டிலும் புதிய வாடிக்கையாளர்களை பணியில் அமர்த்துவது என்பது குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வல்லரசு நாடுகளில் ரெசிஷன் வந்தால் கட்டாயம் பெரிய பாதிப்பு ஏற்படும் இதில் இருந்து தப்பிக்க செலவுகளை குறைப்பது முக்கிய பணியாக இருக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+