இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அடுத்தடுத்து காலாண்டு முடிவுகளை அறிவித்து வரும் வேளையில், அனைத்து நிறுவனங்களும் எதிர்கொண்டு வரும் முக்கியமான பிரச்சனைகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால் ஐடி நிறுவனங்கள் குழப்பத்தில் மூழ்கியிருப்பது மட்டும் அல்லாமல் ஐடி ஊழியர்களும் பீதியில் உள்ளனர்.
இந்திய பொருளாதாரத்தின் முக்கிய தூணாக இருக்கும் ஐடி சேவை துறை டாலர் வருவாய், ஏற்றுமதி மட்டும் அல்லாமல் ஒவ்வொரு வருடமும் பல லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய துறையாக உள்ளது. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் உருவாகியிருக்கும் மந்தமான பொருளாதார வளர்ச்சி சூழ்நிலையில் இந்திய ஐடி நிறுவனங்கள் மாட்டிக்கொண்டு உள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தற்போது பெரும்பாலான ஐடி சேவை நிறுவனங்கள் ஊழியர்களின் செலவுகளை பெரும் சுமையாக பார்க்கிறது. தற்போது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ள டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல் ஆகிய நிறுவனங்கள் மத்தியில் ஊழியர்களின் சம்பளம், சேவைகளுக்கான செலவுகளில் அதிகப்படியான சுமையை எதிர்கொள்வது டிசிஎஸ்.
இந்திய ஐடி நிறுவனங்கள் கடந்த 8 காலாண்டில் ஊழியர்கள் செலவுகள் அதிகரிப்பதை காட்டிலும் தனது வருவாய் குறைவான வளர்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் ஜூன் காலாண்டில் எப்போதும் இல்லாத வகையில் மிகவும் குறைவான ஊழியர்களை பணியில் சேர்த்துள்ளனர். இது பிரஷ்ஷர்கள் மற்றும் என்டரி பிரிவு ஊழியர்களுக்கு அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தும்.
ஐடி நிறுவனங்களில் அட்ரிஷன் அளவு குறைந்துள்ள போதிலும், ஊழியர்களுக்கான சம்பள செலவுகள் அதிகரித்துள்ளது. இது மட்டும் அல்லாமல் பிரஷ்ஷர்கள் மற்றும் துவக்க நிலை ஊழியர்களை பணியில் சேர்ப்பது குறைந்துள்ளதால் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த ஊழியர்களை பணியில் சேர்ப்பது அவசியமாகியுள்லது, இதனால் இத்தகைய ஊழியர்களுக்கு கூடுதலான சம்பளம் கொடுக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
ஜூன் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் அளவு 20.1 சதவீதத்தில் இருந்து 17.8 சதவீதமாக குறைந்துள்ளது, ஹெச்சிஎல் நிறுவனத்தின் அட்ரிஷன் அளவு 19.5 சதவீதத்தில் இருந்து 16.3 சதவீதமாக குறைந்துள்ளது, விப்ரோ நிறுவனத்தின் அட்ரிஷன் அளவு 19.2 சதவீதத்தில் இருந்து 17.3 சதவீதமாக குறைந்துள்ளது.
இதேபோல் ஏப்ரல் காலாண்டை ஒப்பிடுகையில் ஜூன் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனம் கூடுதலாக வெறும் 523 பேரை மட்டுமே பணியில் சேர்ந்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை ஜூன் காலாண்டில் 6,15,318 பேர்.
மேலும் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை ஜூன் காலாண்டில் 2,23,438 ஆக உள்ளது, மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் ஹெச்சிஎல் டெக்-ன் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 2,506 பேர் குறைந்துள்ளனர்.
விப்ரோ நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 2,49,758 ஆக உள்ளது, மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் சுமார் 8812 ஊழியர்கள் ஜூன் காலாண்டில் அதிகரித்துள்ளனர். பொதுவாக அனைத்து முன்னணி ஐடி சேவை நிறுவனங்களிலும் ஊழியர்கள் செலவுகள் அதிகரித்துள்ளதால் மார்ஜின் அளவு பெரிய அளவு பாதித்துள்ளது.


Click it and Unblock the Notifications