ஜூன் காலாண்டு முடிந்த நிலையில் டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல் 3 மாதத்திற்கான நிதியியல் முடிவுகளை வெளியிட்டு உள்ளது. அடுத்த சில தினத்தில் இன்போசிஸ், டெக் மஹிந்திரா, LTIMindtree ஆகியவை தனது அறிக்கையை வெளியிடும்.
இக்காலாண்டு ஐடி நிறுவனங்களுக்கு மிகவும் முக்கியமானது, காரணம் கடந்த 5 மாதத்தில் வர்த்தக இழப்பு, புதிய வர்த்தகத்தை பெற முடியாத நிலை, கார்பரேட் நிறுவனங்கள் டெக் சேவைக்கான செலவுகளை குறைத்தது என பல பிரச்சனைகளை எதிர்கொண்டது.

இதனால் இக்காலாண்டில் வருவாய், லாபம் அளவீடுகளை தாண்டி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்ட எண்ணிக்கை பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பொதுவாக முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல், இன்போசிஸ், டெக் மஹிந்திரா, LTIMindtree ஆகியவை 10000 பேருக்காவது வேலைவாய்ப்புகளை அளிக்கும். ஆனால் ஜூன் காலாண்டில் என்ன நடந்துள்ளது என்பதை நீங்களே பாருங்க...
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ் நிறுவனம் ஜூன் காலாண்டில் வெறும் 523 பேரை மட்டுமே கூடுதலாக பணியில் சேர்த்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை ஜூன் காலாண்டின் முடிவில் 6,15,318 ஆக இருந்தாலும் 3 மாதத்தில் வெறும் 523 பேரை மட்டுமே சேர்த்து அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை ஜூன் காலாண்டில் 2,23,438 ஆக இருந்தது. மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் ஜூன் காலாண்டில் ஹெச்சிஎல் டெக்-ன் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 2,506 பேர் குறைந்துள்ளனர். டிசிஎஸ் 523 பேரை மட்டுமே சேர்த்துள்ள நிலையில் ஹெச்சிஎல் 2,506 பேரை குறைத்துள்ளனர்.
டிசிஎஸ், ஹெச்சிஎல் நிறுவனத்தை தொடர்ந்து ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ள விப்ரோ நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 2,49,758 ஆக உள்ளது, ஜூன் காலாண்டில் வெறும் 8812 ஊழியர்களை மட்டுமே சேர்த்துள்ளது.
இதன் மூலம் இந்திய ஐடி துறையில் வேலைவாய்ப்புகள் எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என ஜூன் காலாண்டு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. இதே ஜூன் காலாண்டில் டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல் ஆகிய 3 ஐடி சேவை நிறுவனத்திலும் அட்ரிஷன் அளவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையால் பாதிக்கப்படுவது பிரஷ்ஷர்கள் தான், பட்டப்படிப்பை முடித்து ஐடி வேலைவாய்ப்புகாக காத்திருக்கும் பலருக்கு மந்தமான வேலைவாய்ப்பு சந்தை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications