டிசிஎஸ், இன்போசிஸ், HCL எல்லாம் மாறிட்டாங்க.. நீங்க எப்போ மாறப்போறீங்க..!!

எங்கு திரும்பினாலும் ஏஐ, எல்லாவற்றிலும் ஏஐ என நாளுக்கு நாள் ஏஐ பயன்பாடு அதிகரித்து வருகிறது. எப்படி திருபாய் அம்பானி 500 ரூபாய்க்கு செல்போன் அறிமுகம் செய்த போது நாட்டு மக்கள் அடித்து பிடித்து வாங்கி பயன்படுத்தினார்களோ அதேபோல் தற்போது ஏஐ தொழில்நுட்பத்தை நிறுவனங்களும், மக்களும் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.

ஏஐ என்ற பூகம்பம் வெடிக்க முக்கியமான காரணமாக இருந்தது OpenAI அறிமுகம் செய்த சாட்ஜிபிடி என்றால் மிகையில், ஆனால் வெறும் 2 வருடத்தில் சாட்ஜிபிடி-க்கு இணையாகவும், இதைவிடச் சிறப்பான LLM உலகளவில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதேபோல் இத்தகைய ஏஐ-யின் பயன்பாட்டு அளவு, மக்கள் ஏற்றுக்கொள்ளும் அளவு இதுவரையில் உலக வரலாற்றில் எந்த துறையிலும், எப்போதும், யாரும் பார்த்திராத ஒன்றாக உள்ளது.

 டிசிஎஸ், இன்போசிஸ், HCL எல்லாம் மாறிட்டாங்க.. நீங்க எப்போ மாறப்போறீங்க..!!

இந்த நிலையில் ஏஐ துறையில் தொழில்நுட்ப மேம்பாடுகளை உருவாக்க, வழக்கம் போல் உலக நாடுகளில் இருக்கும் நிறுவனங்களிடம் இருந்து இந்தியாவின் டாப் ஐந்து IT சேவை நிறுவனங்களுக்கு அடுத்தடுத்து ஆர்டர்கள் குவிந்து வரும் வேளையில், இத்தொழில்நுட்பத்தில் பணியாற்ற ஊழியர்கள் தயாராக உள்ளனரா என்பது பெரும் கேள்வியாக இருந்த நிலையில், இதுகுறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல் ஏஐ அறிமுகத்தால் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் வர்த்தகம் பெறும் அளவும், வருவாயும் குறையும் என்ற கருத்தும் நிலவியது. இவ்விரு கேள்விக்கும் பதில் அளிக்கும் விதமாக ஒரு விஷயம் வெளியாகியுள்ளது. AI மற்றும் ஜெனரேட்டிவ் AI (GenAI) தொழில்நுட்பங்கள் தற்போது முக்கியமானதாக மாறியிருக்கும் வேளையில் இதில் எத்தனை பேர் திறன் பெற்று உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

TCS:
டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் தற்போது சுமார் 1,14,000 ஊழியர்களை மேம்பட்ட AI தொழில்நுட்பத்தில் பயிற்றுவித்துள்ளது. இந்நிறுவனம் இதற்காக ஒரு திறன் பிரமிடு அமைப்பை உருவாக்கி, அதில் துறை சார்ந்த ஏஜென்டிக் AI மற்றும் உற்பத்தி, லைப்சையின்ஸ் போன்ற துறைகளில் பயிற்சி அளிக்கிறது.

HCLTech:
அதேபோல், ஹெச்சிஎல் டெக் சுமார் 42,000 ஊழியர்களை மேம்பட்ட GenAI தொழில்நுட்பத்தில் பயிற்றுவித்துள்ளது, இதில் 12,000 பேர் GenAI திட்டங்களில் தற்போது பணியாற்றுகின்றனர். HCLTech-ன் மனிதவள தலைவர் ராம் சுந்தரராஜன் கூறுகையில், கடந்த இரண்டு காலாண்டுகளில் ஏஐ தொழில்நுட்பத்தில் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறோம், அது சமீபத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

 டிசிஎஸ், இன்போசிஸ், HCL எல்லாம் மாறிட்டாங்க.. நீங்க எப்போ மாறப்போறீங்க..!!

Wipro:
விப்ரோ நிறுவனம் தற்போது 87,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை உயர்ந்த AI திறன்களில் பயிற்றுவித்துள்ளது, இது அவர்களது சேவை தரத்தை மேம்படுத்த உதவுகிறது என தெரிவித்துள்ளது.

Tech Mahindra:
இதேபோல் டெக் மகிந்திரா 77,000 ஊழியர்களுக்கு அடிப்படை AI பயிற்சி அளித்துள்ளது, அவர்களில் பெரும்பாலானவர்கள் மேம்பட்ட நிலையிலும் பயிற்சி பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Infosys: இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் இன்ஃபோசிஸ் தனது ஊழியர்களை AI-அவேர், AI-பில்டர்ஸ் மற்றும் AI-மாஸ்டர்ஸ் என்ற மூன்று பிரிவுகளாக பிரித்து பயிற்றுவிக்கிறது. இதில் AI-பில்டர்ஸ் மற்றும் AI-மாஸ்டர்ஸ் பிரிவினர் கிளவுட்-அடிப்படையிலான மாடல்களை பயன்படுத்தி அல்லது தாங்களே மாதிரிகளை உருவாக்கி/மெருகேற்றி பணியாற்றுகின்றனர்.

இந்நிறுவனம் 2,90,000 ஊழியர்களுக்கு அடிப்படை AI பயிற்சி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது, ஆனால் மேம்பட்ட திறன்களில் பயிற்றுவித்த ஊழியர்கள் எண்ணிக்கையை வெளியிடப்படவில்லை.

 டிசிஎஸ், இன்போசிஸ், HCL எல்லாம் மாறிட்டாங்க.. நீங்க எப்போ மாறப்போறீங்க..!!

ஐடி சேவை துறையில் மாற்றம்:
இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அடிப்படை AI திறன்களில் பயிற்றுவித்த பிறகு, தற்போது உயர்ந்த AI திறன்களை பயிற்சி அளிக்கின்றன. இது இதன் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சேவைகளை வழங்குவதற்கு அவசியமானது, மேலும் உலகளாவிய பொருளாதார நிலையற்ற சூழ்நிலையில் உற்பத்தித்திறன் மற்றும் திறமையை மேம்படுத்த உதவும். இந்த பயிற்சி இந்திய IT தொழிலை சர்வதேச அளவில் போட்டியிடும் நிலைக்கு உயர்த்தும்.

எப்போதும் நம்பர் 1:
TCS, HCLTech, Wipro, Infosys மற்றும் டெக் மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் இதுவரையில் சுமார் 2.5 லட்சம் ஊழியர்களுக்கு அதிகமானோருக்கு மேம்பட்ட AI திறன்களில் பயிற்றுவித்து, தொழில்நுட்பத்தில் முன்னேறி வருகின்றன. இந்த முயற்சி இந்திய IT சேவை துறையை உலக அளவில் தொடந்து வலுவான நிலையில் தக்க வைக்கும் என நம்பப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+