6 மாதங்களில் 30,000 ஊழியர்களை காலி செய்த TCS..!! காலாண்டு நிதி முடிவுகளில் வெளிவந்த உண்மை!!

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக டாடா குழுமத்துக்கு சொந்தமான டிசிஎஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில் டிசிஎஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 2 சதவீதம் பேர் அதாவது 12,200 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டது.

நிறுவன மறுக்கட்டமைப்பின் ஒரு பகுதியாக பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் வருகிற மார்ச் மாதத்திற்குள் இவர்கள் அனைவரும் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு உரிய நிதி இழப்பீடு வழங்கப்படும் என்றும் டிசிஎஸ் நிறுவனம் அறிவித்தது. டிசிஎஸ் நிறுவனத்தின் நடவடிக்கையை தொடர்ந்து நிறுவன ஊழியர்கள் பலரும் தாங்கள் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யப்பட வைப்பதாக தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வண்ணம் இருந்தனர்.

6 மாதங்களில் 30,000 ஊழியர்களை காலி செய்த TCS..!! காலாண்டு நிதி முடிவுகளில் வெளிவந்த உண்மை!!

டிசிஎஸ் நிறுவனத்திற்கு எதிராக போராட்டங்கள் கூட நடைபெற்றன. தொழிலாளர் அமைச்சகத்திடமும் டிசிஎஸ் நிறுவன செயல்பாடுகள் குறித்து புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டன. திடீரென மீட்டிங் என அழைத்து பணிநீக்கம் என அறிவிப்பது, வேலையை விட்டு ராஜினாமா செய்யவில்லை என்றால் தவறான மதிப்பீடுகள் தருவோம் வேறு நிறுவனங்களில் வேலை கிடைக்காத நிலை ஏற்படும் என மிரட்டுவது போன்ற செயல்களில் டிசிஎஸ் நிறுவன ஹெச்ஆர் ஈடுபடுவதாக பல்வேறு ஊழியர்களும் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணம் இருந்தனர்.

இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளில் கடந்த ஆறு மாதங்களில் எவ்வளவு ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வேலை செய்த ஊழியர்களின் எண்ணிக்கை 6,13,069ஆக இருந்தது.

அதுவே மூன்றாவது காலாண்டு முடிவில் அதாவது அக்டோபர் -டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டு முடிவில் டிசிஎஸ் நிறுவனத்தில் இருக்கும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 5,82,163. அப்படி என்றால் இந்த ஆறு மாதங்களில் மட்டும் நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கையில் 30,906 பேர் குறைந்து இருக்கின்றனர். டிசிஎஸ் நிறுவனம் 12,200 ஊழியர்களை தான் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது, ஆனால் உண்மையாக நிறுவனத்தில் இருந்து வெளியேறிய ஊழியர்களின் எண்ணிக்கை 30,000ஐ கடந்து இருக்கிறது. டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் வெளியேறும் விகிதம் 13.5 சதவீதமாக உள்ளது.

இதை பார்க்கும்போது ஊழியர்கள் கூறிய கட்டாய ராஜினாமா புகார்கள் உண்மை தானோ என்ற கேள்விகளை எழுப்புகிறது. இதனிடைய டிசம்பர் மாத காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 13.91% குறைந்து இருக்கிறது. டிசிஎஸ் நிறுவன தலைமை மனித வளத்துறை அதிகாரி சுதீப் குன்னுமால் ஊழியர்களுக்கு ஏஐ சம்பந்தப்பட்ட திறன்களை வழங்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் இதுவரை 2.17 லட்சம் ஊழியர்களுக்கு நவீன ஏஐ திறன் பயிற்சிகளை வழங்கி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+