டாடா குழுமத்திற்கு சொந்தமான டிசிஎஸ் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களில் 2 சதவீதம் பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் உண்மையில் 2 சதவீதம் ஊழியர்கள் அல்ல பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை டிசிஎஸ் நிறுவனம் கட்டாயப்படுத்திய ராஜினாமா செய்ய வைக்கிறது என ஊழியர்கள் தொடர்ச்சியாக புகார் கூறிய வண்ணம் இருக்கின்றனர்.
டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களை மோசமாக நடத்துகிறது , மாஃபியா போல செயல்பட்டு ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குகிறது என ரெடிட் உள்ளிட்ட தளங்களில் டிசிஎஸ் ஊழியர்கள் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை தொடர்ச்சியாக பதிவு செய்த வண்ணம் இருக்கின்றனர். 15 ஆண்டுகள் விஸ்வாசமாக வேலை செய்த நபர் பணிநீக்கம், திடீரென ஒரே போன் காலில் கட்டாய ராஜினாமா என தொடர்ச்சியாக பல புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. புனே அலுவலகத்தில் ஒரே நேரத்தில் 2000க்கும் அதிகமான ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டதாக மகாராஷ்ரா அரசிடம் கூட புகார் அளிக்கப்பட்டது.

ஐடி ஊழியர்களுக்கான சங்கமும் டிசிஎஸ் நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறது. டிசிஎஸ் பணிநீக்க நடவடிக்கைகளில் மத்திய அரசு தலையிட வேண்டும் எனக் கூறி கடிதமும் எழுதி இருக்கிறது. இத்தகைய சூழலில் டிசிஎஸ் நிறுவனம் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் தந்திருக்கிறது. டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி சுதீப் குன்னுமல் பிடிஐ தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இதுவரை தங்கள் நிறுவனத்தில் பணிநீக்க நடவடிக்கை தொடங்கியதில் இருந்து தற்போது வரை 6000 பேர் வரை மட்டுமே வெளியேற்றப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார் .
இது மொத்த ஊழியர்களில் 1 சதவீதம் மட்டுமே எனக் கூறியிருக்கும் அவர் நீக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் நிறுவனத்தில் மூத்த நிலையிலும் நடுத்தர நிலையிலும் வேலை செய்தவர்கள் எனக் கூறியிருக்கிறார். அதே நேரத்தில் 18,500 புதிய ஊழியர்களை புதிதாக நியமனம் செய்திருக்கிறோம் என்றும் அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.
டிசிஎஸ் பணிநீக்க எண்ணிக்கைகள் 80,000 என மிகைப்படுத்தி கூறப்படுகிறது, நிறுவனம் இத்தனை பேரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என எந்த இலக்கையும் வைத்து செயல்படவில்லை இது தொடர்பாக பல தவறான தகவல்கள் பரவுகின்றன என தெரிவித்திருக்கிறார் .
இதனிடையே ஐடி ஊழியர்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் டிசிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட 2025 -26ஆம் ஆண்டுக்கான முதல் காலாண்டு வெளியீட்டு அறிவிப்பில் 6 ,13 ,069 ஊழியர்கள் இருந்ததாக கூறியிருந்தது. அதுவே இரண்டாவது கானாட்டில் 5,93,314 ஊழியர்கள் இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் மூன்று மாதங்களில் அந்த நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கையில் 19,755 பேர் குறைந்து இருக்கின்றனர். அப்படி என்றால் இவர்கள் அனைவரும் நீக்கப்பட்டது இதன் மூலம் தெளிவாகி இருக்கிறது என அதில் குறிப்பிட்டுள்ளது.
More From GoodReturns

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications